பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 காவின் பாண்டியன் பரிகா இ அவர்களில் ஒருவன், இருக்கின்ற பேழையினைத் தேடித் தூக்கி எடுத்துப்போ என்றானே, அவனை யாரும் ஒருபேச்சும் பேசார்கள், சும்மா நின்ற உம்மைஅவன் திருடனென்று சொன்னான் அன்றோ? பொருளானி திருடர்கனை விளைவிக்கின்றான்; பொதுவுடைமை யோன் திருட்டைக் களைவிக் கின்றான்” என்று கூறுகின்றான். இன்னொருவன், "சமுதாயத்தின் நடுவில் மன்னர், பழம்புலவர், வணிகர், அரசியல் எத்தர்கள் ஆகிய மக்களின் பொருளைச் சுரண்டுகின்ற திருடர்கள், தங்கள் திருட்டை மறைக்க முயலும் நிரந்தர முயற்சியே நம்மைத் திருடர் என்பது; நமக்குத் திருட்டுப்பட்டம் கட்டுவது” என்கின்றான். மன்னர் பழம்புலவர் வணிகர்கட் கெல்லாம் வரும்பெயரை நமக்காக்கும் முயற்சி' என்பது அவன் கூற்று. வீரப்பனின் தோழர்கள் தத்தம் மனப்போக்கின்படி சரியான ஆட்சியமையாத சமூகத்தைத் தம் செயலால் கலக்குவது நியாயந்தான் என்பதை வலியுறுத்துகின்றனர்; தெளிவுபடுத்துகின்றனர். பொதுவுடைமைக் கோட்பாட்டையும், சமுதாயக் கோட்பாட்டையும் பகுத்தறிவு மற்றும் விடுதலையுணர்வுக் கோட்பாட்டையும் வீரப்பன் வாயிலாக விளக்குகின்றார் பாவேந்தர். காவியத்தின் இறுதியில் அனைவரும் ஒன்று கூடுகின்றனர். வேழநாட்டுப் படைமறவர் காப்பளிக்க வருகின்றனர். வாழ்த்துரைக்கக் கனக்காயர் வருகின்றார். அனைவரும் வேலனோடு பேழையைக் காண்கின்றனர். அன்னத்தின் நடைகண்டு அனைவரும் மகிழ்கின்றனர். துறவியாரும் வந்தார். ஆத்தாள் தள்ளாடி நடந்து வந்தாள்.நீலியும் வந்தாள்.வெற்றியெல்லாம்துறவியினுடையது என்று கூறி வேலன் அவரை வணங்கி நின்றான். வாழ்வு முழுவதையும் 24. இயல்-17:2- பக். 31 25. இயல்-17:3- பக். 32