பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைக் காவிய மாந்தர்கள் v 77 துளித்தற்கு உவகையுடன் ஒருபோதும் மறவேன் என்றாள் அன்னம் துறவியாரை வணங்கி, பெற்றவன்தன் பிள்ளைக்கு நலத்தைச் செய்தான் பெருவியப்புக் கிடமில்லை என்று கூறி ஒற்றுநரை முடிநீக்கி வீரப் பன்தன் உருக்காட்டி னான்யார்க்கும் உவகை ஆட்டி" துறவியாரின் உண்மை உருவம் கண்டு அனைவரும் மகிழ்கின்றனர். எதிர்பாராதவகையில் கிடைத்த பாண்டியன் பரிசு அடங்கியபேழையைக் காப்பாற்றி கதிர்நாட்டு அரசாட்சியைக் கைப்பற்றக் காரணமாயிருந்த வீரப்பன் ஒன்றிய காவிய மாந்தனாகின்றான். 2. ஒட்டிய காவிய மாந்தர்கள் () வேழமன்னன்: இவன் வேழ நாட்டரசன் நரிக்கண்ணன் என்ற சேனைத் தலைவனின் சூழ்ச்சியால் கதிரை நாட்டின்மீது தண்டெடுத்து வந்து அந்த நாட்டைக் கைப்பற்றி நரிக்கண்ணனுக்கு முடிசூட்டியவன். இஃது எதிர்பாராமல் நடைபெற்ற நிகழ்ச்சி. இம்மன்னன் நாட்டாசை கொண்டவனும் அல்லன்; எளியாரைக் கொடுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கமுடையவனும் அல்லன். மாறாக, பண்டைத் தமிழ்மன்னர்களின் மானமும், மதியும் வீரமும் கொண்ட குணநல சீலன். இத்தகைய நற்பண்புகளைக் கதிரை நாட்டரசன் இறந்தபின்பு கண்ணுக்கினியாளிடம் கூறும் ஆறுதல் உரைகளால் அறியலாம். ஆயினும் வேழநாட்டரசன் கதிரை நாட்டுமீது தண்டெடுத்து வருவதற்குக் காரணம் யாது? இதனை முதியோன் ஒருவனின் கூற்றால் அறியலாம். வேழமன்னன் நரிக்கண்ணனுக்கு முடிசூட்டி அமைச்சர், தானைத் தலைவர்கள் சூழ திருமன்றில் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தபோது கண்ணெதிரில் அமர்ந்திருந்த நாட்டார்பால், குளிர்புனல்சேர் கதிர்நாட்டை நரிக்கண் ணற்குக் கொடுத்துவிட்டேன்; அவன்குறையை முடித்து 26. இயல் - 92:2- பக். 173 27. இயல் - 28:1- பக்.50