பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சுராவின் பாண்டியன் பரிசு ஒரு மதிப்பீடு விட்டேன்’ ன்ைனருமைப் படைத்தலைவன் மகிழும் வண்ணம் யான்புரியத் தக்கது புரிந்து விட்டேன் தன்னருமை உழைப்பாலே என்னி டத்தில் தான்பெறத் தகுந்ததைத்தான் பெற்று விட்டான்' என்றுகூறி பொன்முடியை அவன் தலையில் சூட்டும்போது பொதுமக்கள் முகத்தில் துன்பத்தைக் கண்டதாகவும் அதற்குக் காரணம் அறியக் கூடவில்லை என்று மொழிந்தபோதும் ஒரு முதியோன், கூறுவான் : நரிக்கண்ணன் கதிர்நாட்டை அடைவதற்கு நல்லதொரு சூழ்ச்சியினைத் தேடலானான்; எரிவுதனைக் கதிரைவேல் மன்னன் மேலே ஏற்றினான் தங்கட்கு: நம்பி னிர்கள்' என்று தொடர்ந்து போரில் அறம் பிழைத்த விவரத்தையும் (நரிக்கண்ணன் கதிரைவேலன்மீது ஈட்டியினைச் செலுத்தியதையும்) கூறித் தான் அன்னத்தைக் காத்ததையும் கூறித் தன் மாற்றுடையையும் அன்னத்தின் மாற்றுடையையும் களைந்து தான் பணிப்பெண் ஆத்தாள் என்றும், அன்னம் இளவரசி என்றும் மெய்ப்பித்தாள். அன்னத்தையும் தன்னையும் கொன்றொழிக்க நரிக்கண்ணன் கையாளும் ஒவ்வாத முறைகளையெல்லாம் தோலுரித்துக் காட்டுகின்றாள் ஆத்தாள். போர்க்களத்தில் புண்பட்ட முதுகு கண்டு, “ஐயகோ முதுகு காட்டத் துணிந்ததுவோ தமிழா! நின் தமிழ நெஞ்சம்!” என்று நாணப்பட்டுப் புலம்பும்போது, எதிரில் நின்ற இளவேட்டரசன், இரக்க நெஞ்சன் கூறுவது: “மனை விளக்கே நின்துணைவன் கதிரை வேலன் வாட்போரை என்னோடு நிகழ்த்துங் காலை முகமறைத்த ஒருதியன் எவனோ பின்னே முடுகிவந்து நடுமுதுகில் எரிந்தான் ஈட்டி: திகைத்தேன்நான் சாய்ந்தான்அம் மறவோர் மன்னன்! 28. இயல்- 28:2. பக்.50 29. இயல் 28: 3 - பக், 51