பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைக்காவிய மாந்தர்கள் 79 திகழிமய மலைபோலும் அவன்கொண்டுள்ள புகழ்க்கென்ன! உன்குடிக்கு வாய்த்த மானம் போனதெனப் புலம்புவதும் என்ன? பெண்னே! அகத்துன்பம் நீங்கியிரு: செல்க உன்றன் அரண்மனைக்கே” இந்த ஆறுதல் மொழிகள் அவனது உயர் பண்புகளைப் புலப்படுத்துகின்றன. நரிக்கண்ணன் அன்னத்தைத் தேடி அரண்மனைக்குள் செல்லும்பொழுது, “கரிய உடை போர்த்து வந்த காலாள்" நரிக்கண்ணன் தன் உடன் பிறந்த தங்கையைக் கொன்ற செய்தியை வேழநாட்டு மன்னனுக்கு எடுத்துரைக்கின்றான். இதனால் இரக்கம் மிக்க மன்னன், மனம் உருகுகின்றான். “..... மக்களிடை மகனாய் வாழ ஒண்ணாத கொடுவிலங்கை இந்நாள் மட்டும் தெரியாதேன் வைத்திருந்தேன் அரண்மண்ைக்குள் திருவதெந் நாள்இந்தப் பழிதான்” என்று உள்ளம் வெதும்புகின்றான். “அருகிருந்த அழிவொன்றே தொழிலான் மறவர்தாமும் இரக்கமுறலானார்கள்!” என்று கவிஞரும் தம் கூற்றாக உரைத்து உள்ளம் உருகுகின்றார். அன்னையையும் அப்பனையும் இழந்த கதிரைநாட்டு இளவரசி மீது மிகவும் கழிவிரக்கம் கொண்டவன் வேழமன்னன். அன்னத்தையும் ஆத்தாளையும் இனங்கண்டுகொண்ட பின்னர், என்செய்வேன் பழிசுமந்தேன் பழிசுமந்தேன் எப்போதும் உமக்கேஓர் தீமை யின்றி யான்காப்பேன் அஞ்சாதீர் என்றான் மன்னன்’ இவர்கள் இருவரையும் காக்கும் முறைகளை ஆராய்கின்றான். அமைச்சன் சொல்வான்: கொடியோனைக் கதிர்நாட்டை ஆள விட்டீர்! சீறுகின்ற பாம்புக்குத் தவளை யூரில் 30. இயல் - 8:3-4 - பக், 13 31. இயல்- 12 : 1. பக். 19 32. இயல் - 29 : 2 - பக்.52 33. இயல் - 30:2- பக்.53