இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அணிந்துரை
'பாண்டியர் வரலாறு' எனும் ஆராய்ச்சி நூலைப் படித்தேன். பண்டை இலக்கியங்களின் சான்றுகளையும் கல்வெட்டுக்களின் உண்மைகளையும் ஒப்புநோக்கிப் பாண்டி மன்னரின் மெய்ச்சரிதையைத் தமிழ்மக்கள் அறிந்துகோடற்கு ஏற்ற கருவிநூல் இதுவேயாகும்.
நூலாசிரியர் தமிழ்ப்புலமை மிக்கவர்; கல்வெட்டுக்களை நுண்ணிதின் ஆய்ந்து உண்மைகாண வல்ல வர். கட்டுரை வன்மையும் கலைபயில் தெளிவுமுடைய இத் தமிழ்ப்புலவர் இந்நூலை இயற்றி உதவியது யாம் நன்றியுடன் போற்றத்தகும் நற்செயல்.
தமிழ்மக்கள் இதனைப் போற்றிப் பயன் கொள்வாராக.
கரந்தைத் தமிழ்ச்சங்கம்,
தஞ்சை
14-7-140
த.வே.உமாமகேசுவரன்,
சங்கத்தலைவர்