பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11
சீலமே சொலீர் காலன் விடவே

பந்தியார் கழல் சிந்தை செய்ம்மினே

பாடியே மனம் நாடி வாழ்மினே

என்ற தொடர்களால் கூறியருளினர். இவை உபதேச மொழிகள். 'யார் மதுரைப் பெருமானர் பக்கம் சார்கின்றனரோ, அவர்கள் உலகையாளும் அரசப் பதவி பெறுவர். மனத்தில் எண்ணித் தொழுதால் இன்பம் பெறுவது உறுதி. இறைவன் கழலிணைகளே நம்பி வாழ்பவர்களுடைய துன்பம் அழியும். சுந்தரேசப்பெருமான் புகழ்களைக் கூறும் மன முடையவர்கள் இரக்கமான மனத்தினைப் பெறுவர். இஃது உண்மை” என்பன உறுதிமொழிகள். இவற்றை 'ஆலவாயிலான் பாலதாயினர் ஞாலம் ஆள்வர்" "எண்ணியே தொழத் திண்ணம் இன்பமே” "கழல் கம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே" "உரைக்கும் உள்ளத்தார்க்கு இரக்கம் உண் மையே” என்ற திருவாக்குகளால் காணலாம்.

இப்பதிகத்தின் ஈற்றுச் செய்யுள் இப்பதிகத் தினேப் படிப்பதால் அடையும் பயன் கூறுகிறது. படிப்பதால் இப்பிறப்பில் ஏற்படும் துன்பங்கள் ஒழியும் என்பதே பயன். இங்ங்னம் கூறும்போது திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகத்தின் முடிவில் இதைத் தமிழ்ப்பதிகம் என்று கூறியிருத்தல் நோக்குதற்குரியது இங்கனம் கூறும் முகமாக, ஏனைய மொழிகள் போல் தமிழ் மொழி அழியும் தன்மைத் தன்று; அழியாத கன்னித் தமிழ்: இனிமை தரும் தமிழ் என்று தம் உள்ளக் கிடக்கையினை உணர்த்தியதை உன்னி உன்னிக் களிப்போமாக.


இரண்டாம் திருமுறை 66-வது பதிகம்
திருநீற்றுப் பதிகம்
பண் காந்தாரம்

1. மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு

கந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு