பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13

பதிகமே இது. இப்பதிகம் சுரநோய் போக்கவே பாடப் பட்டது என்பது இப்பதிகத்தின் இறுதிப் பாடலால் நன்கு தெரிகிறது. அதாவது, "தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச் சாற்றிய பாடல்கள்” என்பது. ஆகவே இது ஆளுடைய பிள்ளையார் சரித்திரத்திற்கு அரண் செய்யும் அகச்சான்றுப் பதிகங்களுள் ஒன்றாகும்.

இத்திருநீற்றுப் பதிகத்தால் திருநீற்று மேன்மைகள் பல தெரிகின்றன. இத் திருநீறு மந்திரமாகவும் தந்திரமாகவும், உள்ளது என்பதும் தேவர்களும், முனிவர்களும், புண்ணியர்களும், இராவணனும், பூசிப் பொலிவுறுகின்றனர் என்பதும், எல்லாச் சமயங்களிலும், வேதத்திலும், திருநீற்றுச் சிறப்பே பேசப்படுகிறது என்பதும் நன்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளன. சிறப்பாகச் சைவசமயத்திற்கே இத்திருநீறு உரிமைப் பொருளாயினும், இதன் சிறப்புணர்ந்த பிறநாட்டவரும் சமயத்தவரும், இதனைப் போற்றுகின்றனர் என்பதைத் திருஞானசம்பந்தர் "சமயத்தில் உள்ளது நீறு" என்றும் 'தக்கோர் புகழ்வதுறுே” என்றும் தேசம் புகழ்வது நீறு என்றும் 'புண்ணியர் பூசும் வெண்ணிறு" "எண் திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு" என்றும் சுட்டிக்காட்டினர். இஃது உண்மைக்கருத்துக்கள் என்பதை நம்மாழ்வார் திருவாய் மலர்ந்த திருவாய் மொழிகளாகிய,

கரிய மேனிமிசை வெளிய நீறுசிறிதே இடும் பெரிய கோலத்தடங் கண்ணன் விண்னுேர் பெருமான் தன்னை உரிய சொல்லால் இசைமரலைகள் ஏத்திஉள்ளப் பெற்றறோற்கு அரிய துண்டோ எனக்கு இன்றுதொட்டும் இனி என்றுமே

இவளைப் பெறும்பரிசு இவ்வணங்காகுதல் அன்று அந்தோ குவளைத்தடம் எண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனன் வெளக்களிறு அட்டபிரான் திருநாமத்தால் தவளப்பொடி கொண்டு நீர் இட்டிடுமின் தணியுமே,

இவற்றைக் கொண்டும் நிறுவிக் காட்டலாம்.