பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

செய்யுளும், எட்டிசைந்தமூர்த்தி என்னும் தொடரும் விளக்கி நிற்கின்றன. திருஞானசம்பந்தர் மதுரைப் பரமேட்டியின் தி ரு ட ன த் ைத கினைப்பதையே எப்போதும் தம், நியமமாகக் கொண்டவர் என்பதை "கின்று இயங்கி ஆடவே கினைப்பது என் நியமமே” என்று கூறியதோடு கில்லாமல் கம்போல்வாரும் அந் நியமத்தில் ஈடுபடவேண்டும் என்பதையும், 'நிறை இலங்கு நெஞ்சில் கினைப்பதே கியமமே” என்றும் உபதேசித்தும் அருளினர். இறைவர் எல்லாமாய் இருப்பதோடு இன்றி, கால்திசைக்கும் மூர்த்தியும் ஆவர் என்றும் கூறி உலக முழுமைக்கும் இவரே முழுமுதற் கடவுள் என்பதையும் விளக்குவார்போல "நால் திசைக்கும் மூர்த்தியாகி கின்றதென்ன நன்மையே' என்று வியப்புடன் வினவுவார் ஆயினர். இவ்வாறு இறைவர் எல்லாத் திசைக்கும் உரியவராய் இருந்தும் சமணர்களும், பெளத்தர்களும் அவரைப் போற்றியும் அவர் திருவடிகளைப் புகழ்ந்து புண்ணியம் உற்றிலரே என்ற இரக்கத்தினராய், “தேற்றம் இல் வினைத்தொழில் தேரரும் சமணரும், போற்றிசைத்து கின்கழல், புகழ்ந்து புண்ணியங் கொளார்” என்றும் கூறுவாராயினர். இந்தவாருன உண்மை அறிவு (தேற்றம்) அவர்கட்டு இல்லாமல் வேறு வேறு தொழில்களைச் செய்கின்றனர் என்பதை விளக்கவே "தேற்றம் இல் வினைத் தொழில் தேரரும் சமணரும்" என்றனர்.

இப்பதிகத்தின் ஈற்றுப் பாடலால் சம்பந்தர் பிறந்த ஊர்புகலியாகிய சீர்காழி என்பதும் சிறந்த கேள்வி ஞானம் வாய்க்கப்பெற்றவர் என்பதும், திருப்புகலி நல்ல நீர்வளனும் உடையது என்பதும், மக்கள் தம் தீமை தீர எண்ணில்ை இப்பதிகம்பாட அது நீங்கப்பெற்று | ற் சி ங் ைத வாய்க்கப் பெற்ற தேவரும் ஆவர் என்பதும் அறியக் கிடக்கின்றன.