பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

குணம் வாய்ந்தவர், நீலநிறம் வாய்ந்த பருத்த வடிவினர் ᏮrörᎥ Jör .

திருஞானசம்பந்தர் மீது சில பழிகளே ஏற்றிக் கூறத் தொடங்குவர். அப்பழிகளுள் ஒன்று அவர் சமணர்களைக் கழுவேற்றிக் கொன்றனர் என்பது. அவ்வாறு அவர்களைக் கழுவேற்றிக்கொன்ற குறிப்பு இப்பதிகத்தில் காணப் பட்டிலது. அவர்களே வாதில் வெல்லவே இவர் முனைந்து கின்ருர் என்பதுதான் காணப்படுகிறது. இதனை 'அமனெடு தேரரை வாதில் வென்றழிக்க” (வென்றழிக்க என்பது வெல்ல என்ற பொருளில் தான் உள்ளது. ஈண்டு வென் றழிக்க என்பதை ஒரு சொல்லாகக் கொள்ள வேண்டும்) "அமண் தேரரை எய்தி வாது செய” 'முறிய வாது செய' "செறுத்து வாது செய” “அருகர் திறங்களைச் சிந்த வாது செய" (திறங்களே என்பதைச் சிரங்களே என்று கருதினர் போலும்!) "ஒட்டி வாது செய, திறம் கழல வாது செய” தேற்றி வாதுசெய, தென்ற (சிதறிப் போகும்படி) வாது செய' என்ற தொடர்களில் காணலாம். திருஞான சம்பர் தருக்குச் சமணர்களேத் தெளிவடையச் செய்ய வேண்டும் என்பது கருத்து ஆதலின், "அமணரைத்தேற்றி வாது செய' என்றும் கூறி அருளினர். அவர்கட்கு இறைவன் சீலம் உணர்த்த வேண்டும் என்பதும் இவரது திருவுள்ளக் குறிப்பு என்பது "நீலமேனி அமணர் திறத்து நின்சீலம் வாது செயத் திருவுள்ளமே" என்பதல்ை பெறப்படுகிறது.

திருஞானசம்பந்தர் தாமாக ஒன்றையும் செய்ய எண்ணுமல் எல்லாவற்றிற்கும் இறைவர் திருவுள்ளச் சம்மதத்தையே நாடி நின்ருர் என்பது இவர் வாது செய்யப் புறப்படும் முன் இறைவர் உத்தரவு வேண்டியதினின்றும் உணரலாம். இதனை இப்பதிக ஈற்றுப் பாடலில் திருஞான சம்பந்தர் தெளிவுற "கூடல் ஆலவாய்க் கோனே விடை கொண்டு, ஆடல் மேனி அமணரை வாட்டிட" என்று