பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

என்று தோற்றமளிப்பவராய் இருந்தனர். ஆகவே அவர் கள் பார்வைக்கும் பெண்கள் போல் முகப்பொலிவுடன் காணப்பட்டனர். இதனுல்தான் 'பெண் அகத்து எழில் சாக்கியர்' என்று திருஞானசம்பந்தரால் குறிப்பிடப் பட்டனர்.

மேலே கூறப்பட்ட குணமுடையவர்களுடன் தாம் வாது செய்வது முறையா அன்ரு என்பதை இறைவரே நன்கு சிந்தித்துத் தமக்கு உத்தரவு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே “திேயாக கினைந்து அருள் செய்தியே' என்று தி ரு ஞா ன ச ம் பங் தர் இறைவரை வேண்டுவ ராயினர்.

திருவாலவாய் ஆலயம் அமைந்த கூடலம்பதி, கல்ல காற்றுகளையுடைய வயல்களையும் சோலைகளையும் நெருங் கப்பெற்று மலர் மிகுதியினல் தேனும் கிரம்பப் பெற்றுத் திகழ்ந்தது. ஒலிக்கும் பூர்ே வளம் சூழ்ந்தது. வண்டுகள் இசைபோல முழங்கும். இத்தகைய வளப்பம் உடையது கூடலம்பதி என்பதும் இப்பதிகத்தால் அறிய வரு கின்றன.

திருஞானசம்பக்தர் சிவஞானம் கைவரப் பெற்றவர். அவர் பெற்ற ஞானம் மெய்ஞ்ஞானம். அவரும் தமிழ் மொழியினே நன்கு உணர்ந்தவர். என்ருலும், அறிஞர் கூறுவனவற்றையும் கேட்ட மெய்ஞ்ஞானம் வாய்க்கப் பெற்றிருந்தார். இக் கருத்துக்களே எல்லாம் "சந்தமார் தமிழ் கேட்ட மெய்ஞ்ஞான சம்பந்தன்' என்று தாமே குறிப்பிடுவதால் அறியலாம். தமிழ் மொழியைக் குறிப் பிடும்போது அம்மொழியின் இசைச் சிறப்பை உணர்த்தச் 'சந்தமார் தமிழ்” என்றனர். இப்பதிகத்தை ஒதினால் பழி நீங்கும் என்பதும் இப்பதிக இறுதிப் பாடல் அறிவிக் கின்றது.