பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

யினைப்பாடி முருகன் திருவருளால் அக் குகையினின்றும் வெளிவந்தார் என்றும் கூறப்படுதலும் உண்டு. மலையை வலம் வரலாம். மலைமேல் ஒரு சிறு குளம் உளது. அதனைக் காசித்தீர்த்தம் என்பர். அதில் பல கிறமுடைய மீன்கள் உள்ளன. மலேமீது ஒரு சிறு மசூதியும் உண்டு. கீழ்க் கோயிலில் உள்ள தீர்த்தம் சரவணப்பொய்கை எனப்படும். இறைவர் திருப்பெயர் பரங்கிரிநாதர். இறைவியார் திருப் பெயர் ஆவுடையநாயகி.

இக் கோயிலின் முன் மண்டபத்தில் உள்ள தெய்வ யானையின் திருமணக்கோலப் பொலிவு கண்டு இன்புறத் தக்கது. பரங்கிரி மலைக்குத் தெற்கில் உமையாண்டாள் கோயில் என்னும் பெயரில் ஒர் ஆலயம் உண்டு.

திருப்பரங்குன்றம் மதுரைக்குத் தென் மேற்கில் கான்கு கல் தொலைவில் உள்ளது. பஸ்வசதியுண்டு. ரயில்வே ஸ்டேஷனும் உண்டு. அங்கிருந்து கிழக்கே கால் மைல் தொலைவு நடந்தால், இத்தலத்தை அடையலாம்.

முதல் திருமுறை பதிகம் 100 பண் குறிஞ்சி 1. நீட்லர் சோதி வெண்பிறையோடு நிரைகொன்றை சூடலன் அந்திச் சுடர்எரி ஏந்திச் சுடுகானில் ஆட்லன் அம்சொல் அணி இழை யானை ஒருபாகம் பாடலன் மேய நன்னகர் போலும் பரங்குன்றே. (அ. சொ.) கிரை-வரிசையாக, ஒழுங்காக, குடலன்சூடிக்கொண்டிருப்பவன், ஆடலன்-ஆடுபவன், அம், அணி” அழகிய, இழையாள்-ஆபரணம் அணிந்த பார்வதி, பாட லன். பாடுபவன். 2. மைத்தகு மேனி வாளரக் கன்தன் மகுடங்கள்

பத்தினை திண்தோள் இருபதும் செற்ருன் பரங்குன்றைச் சித்தம் தோன்றிச் செய்கழல் உன்னிச் சிவன் என்று நித்தலும் ஏத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே.