பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

(அ.சொ.) மைத்தகுமேனி வாள் அரக்கன்-கருமை யான உடம்பினைப் பெற்ற இராவணன். அரக்கன்-ராட் சதன், மகுடங்கள்-முடிகள், செற்ருன்-அழுத்தியவன். கழல்-திருவடி, உன்னி-எண்ணி. ஏத்த-போற்ற, தொல்பழைய, வினை-துன்பம் தருகின்ற.

3. தட்மலி பொய்கைச் சண்பைமன் ஞான சம்பந்தன்

படமலி நாகம் அரைக்கசைத் தான் தன் பரங்குன்றைத் தொடைமலி பாடல் பத்தும் வல்லார்தம் துயர்போக்கி விடம்மலி கண்டன் அருள் பெறும் தன்மை மிக்கோரே.

(அ. சொ.) தடம்மலி-பரப்பு மிகுந்த, சண்பைமன். சீர்காழித்தலைவர், தொடை-எதுகைத் தொடை மோனைத் தொடைமுதலிய யாப்புக்குரிய தொடைகள், மலி-நிறைந்த. கண்டன்-கழுத்தையுடையவனே.

இப் பரங்குன்றை யார் எண்ணித் தொழுகின்ருர் களோ அவர்கட்கு நோய் அணுகாது. சிவன் என்று தினமும் கூறுபவர்க்குத் தொல்வினை இல்லை' என்ற குறிப் புக்களே "உன்னிய சிங்தை உடையவர்க்கு இல்லை உறு நோயே" 'சிவன் என்று கித்தலும் ஏத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே' 'தொண்டால் ஏத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே" என்ற அடிகளில் காணலாம்.

இப்பதிக ஈற்றுப் பாடலால் திருஞான சம்பந்தர் சீர் காழியில் தலைசிறந்து விளங்கியவர் என்பதும் அப்பதி குளங்கள் நிறைந்தது என்பதும், இப்பதிகம் யாப்புக்குரிய தொடைகள் பல அமைந்தது என்பதும், இப்பதிகப் பாடல் களைப் பாடுபவர் துன்பம் தீர்ந்து திருநீலகண்ட மூர்த்தியின் திருவருள் பெறும் தன்மை மிக்கவர் ஆவர் என்பதும் அறியக்கிடக்கின்றன.