பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

இடம் தெரியாமல் மறைந்தது. ஆனால், சம்பந்தர் இட்ட ஏடு வைகை யாற்றினை நீர் ஓட்டத்திற்கு எதிராகச் சென்று. வைகைக் கரையில் தங்கிவிட்டது. இவ்வேடு தங்கிய இடமே ஏடகம் எனப்படும். திரு என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டுத் திருவேடகம் என்று அழைக்கப்படுவ தாயிற்று. இவ்விடத்தில் ஏடு சென்று தங்கியது என்பது. உண்மை என்பதை உணர. இத்தலத்தைப் பற்றித் திரு ஞானசம்பந்தர் தாம் பாடிய பதிகத்தின் ஈற்றுப்பாடலில் "ஏடு சென்றணேதரும் ஏடகத் தொருவனே' என்று குறிப் பிட்டிருப்பதன் மூலம் காணலாம்.

இத்தலத்து இறைவர் ஏடகநாதர். இறைவியார் உமாதேவியார். தீர்த்தம் வைகை நதியே. இத்தலத்திற்கு உரிய பதிகம் ஒன்றே. அது திருஞானசம்பந்தரால் பாடப் பட்டது. இத்தலம் மதுரையினின்று சென்னை நோக்கிச் செல்லும் இருப்புப்பாதை மார்க்கத்தில் உள்ள சோழ வந்தான் என்னும் இரயில்வே ஸ்டேஷனுக்குத் தென் மேற்கே இரண்டரை கல் தொலைவில் வைகை யாற்றங் கரையில் இருக்கிறது.

மதுரை டவுனிலிருந்து பஸ்மூலம் சென்று இக் தலத்தை அடைய்லாம்.

முன்ரும் திருமுறை பதிகம் 32 பண்-கொல்லி 1. வன்னியும் மத்தமும் மதிபொதி சடையினன் பொன்னியல் திருவடி புதுமலர் அவைகொடு மன்னிய மறையவர் வழிபட அடியவர் இன்னிசை பாடலார் ஏடகத் தொருவனே. (அ. சொ) வன்னி-ஒருவகை மலர், மத்தம்-ஊமத் தம்பூ, மதி - சந்திரன், பொதி - கிறைந்த, இயல்-தன்மை, மன்னிய-கிலேபெற்ற, மறையவர்-வேதம் உணர்ந்தவர்.