பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

கோசலம், ஆடி-திளைத்து, ஏத்த-போற்ற, தேனில் பொலி மொழியாள்-இத் தலத்துத் தேவியார் திருப்பெயர்களுள் ஒன்று. t 2. கூனல்பிறை சடைமேல்மிக உடிையான் கொடுங்குன்றைக்

கானல்கழு மலமாநகர் தலைவன்நல கவுணி ஞானத்துயர் சம்பந்தன் நலம்கொள் தமிழ் வல்லார் ஊனத்தர்ெடு துயர்தீர்ந்துல கேத்தும்எழி லாரே (அ. சொ.) கானல்-கடற்கரைச் சோலை, கழுமலம்சீர்காழிக்குரிய பெயர்களில் ஒன்று, கவுணி-கவுணிய கோத் திரம், ஊனம்-குற்றம், ஏத்தும்-போற்றும், எழிலோர்அழகர் ஆவார்.

இத்தலத்துப் பதிகம் கொடுங்குன்றின் இயற்கை வளத்தை இனிதின் எடுத்து இயம்புகிறது. கொடுங் குன்றம், மேகத்தைக் கிழித்து ஓடும் பிறைச் சந்திரன் தவழும் இடம். குளிர்ந்த சாரலேயுடையது. மயில் தன் பெடையோடு தழுவி இன்புறும் சாரலேயுடையது. குயில் இன் இசை பாடும் குளிர்ந்த சாரலேயுடையது. இம்மலையில் பாயும் நீர் மணி, பொன், மணமுள்ள மலர்களைக் கரைகளில் கொழித்துக்கொண்டு வரும் தன்மையது. சாரங்களில் யானையும் சிங்கமும் இறங்கு காட்சியும் காணக்கூடிய தாகும். அருவிகள் மணியும் பொன்னும் அடித்து இறங்கி வரும் தன்மையது. மேகம் இடிக்கும் இடி ஒசைகேட்டு, கோட்டான்கள் பயந்து மலேயினின்றும் இறங்கிச் செல்லும். இவ்வாறே யானைக் கூட்டங்களும் இடியின் குரல் ஒசை கேட்டு மலர்ச் சோலைகளில் நெருங்கும். கடம்பு, மாதவி, முல்லே, குரவம் முதலான மலர்கள் மலர்ந்து எல்லாம் ஒன்று சேர்ந்து மணம் வீசும் சோலைகள் சூழ்ந்த குளிர்ந்த இடமாகும்.

இம் மலேச்சாரலில் திரியும் யானைக் கூட்டங்கள், இங்கு வளர்ந்துள்ள மூங்கில்களே முறித்து எடுத்துக்கொண்டு

Af