பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

சுனைகளில் சென்று படியும். இங்கு சிங்கங்கள் கர்ச்சனை செய்ய அதைக் கேட்டதும் வெளிவர அஞ்சி மலைக்குகை களிலேயே தங்கி இருக்கும். சிற்சில சமயங்களில் சிங்கம் யானை இருக்கும் மலைக்குகைக்கு அருகில் வருதலும் உண்டு. அதுபோது யானே மிகவும் பயந்து தான் இருக்கும். மலைக்குகையினைக் குத்தி வழிகண்டு அப்பாற் செல்ல முயன்றும் வழிகானது அக்குகையிலேயே தங்கி இருக்கும்.

நோகத்தோடு இளவெண் பிறைகுடி”, “அரவத்தோடு இளவெண் பிறை விரவும்' என்று கூறிப் பகையுடையவர் களும் பரமனே அடைந்தபோது பகையின்றி ஒன்றி வாழ்வர் என்று விளக்கப்பட்டது. இறைவன் 'அம்மான் என உள்கித் தொழுவார்கட்கு அருள்செய்யும் பெம்மான்' என்பதை அறிக. கொடுங்குன்றம் பழககர் என்ற பெய ருடையது என்பதையும் இப்பதிகத்தால் அறியலாம். பழய நகரே என்ற தொடரைக் காண்க.

திருஞானசம்பந்தர் கெளனிய கோத்திரத்தைச் சார்க் தவர் என்பதும் ஞானத்தில் உயர்ந்தவர் என்பதும் ஈற்றுப் பாடலால் அறியலாம். இப்பதிகம் கலங்கொள் தமிழ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 'கலம்கொள் என்ற அடைமொழிகளே கினேவு கொள்க. இது கலங்கொள் தமிழ் என்பதல்ைதான் இதனே ஒதவல்லவர் ஊனமும், துயரும் நீங்கப்பெற்று உலகம் போற்றும் எழிலும் பெறுவர் என்க.

6. திருப்பத்துார் பாண்டியநாட்டுப்பாடல்பெற்ற தலங்களுள் இஃது ஆருவது. இவ்வூரில் உள்ள தேவாலயம் தி ரு த் த வரி எனவும் ரீதளி எனவும் கூறப்பெறும். இதனை அப்பர் தம் திருத்தாண்டகத்தில் பாடல்தோறும் திருப்பத்துாரில் "திருத்தளியான்” என்று சுட்டிக்கொண்டு வருவதால் அறியலாம்.