பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

む8

பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே தின்ற புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு

தென்காட்டும் செழும்புறவில் திருப்புத் தூரில்

திருத்தளியான் காண்அவன்என் சிந்தை யானே

(அ. சொ.) மருங்குல்-இடை, பொருப்பு-மலை, சிலேவில், கனகக்கிழி-பொன்முடிப்பு, தருமி-தருமி என்னும் அந்தணச் சிறுவன், கடி-வாசனை, மருங்கே-பக்கத்தே, புனம்-மலேயைச் சார்ந்த கொல்லைகள், தென்-இசை, புறவு-காடு.

திருப்புத்துார் வளங்கள் அழகாக அப்பர் பெருமானல் இத்தாண்டகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. -

இத்தலம் முழுதும் கல்ல திருத்தமான வயல்களைப் பெற்றது. இவ்வூரில் உள்ள வீதிகள் நீண்டு, தேர் சென்று மீளும் பெருமை மிக்கன. "தேராரும் நெடுவீதி' என்று கூறப்பட்டுள்ளது. கொன்றை மலர்கள் நன்கு மலர்ந்து பொன் போலப் பூத்திருந்தன. மலராகிய பொன்னைக் கைப்ே டி வாங்கிக்கொள்வது போலக் காந்தள் மலர்கள் கைகள் போல மலர்ந்து இருந்தன. நல்ல காட்டு வளம் பெற்று வண்டுகள் இசை செய்தவண்ணம் இருந்த இவ்வூரில், நல்ல வளமான எருமைகள் அழகுடன் மடுக்களில் படிந்து இன்புறும்; அழகு பொருந்திய சோலைகள் பக்கங்களில் மிக்குக் காணப் படும். எருதுகளின் உழைப்பை மிகுதியும் கொண்ட வயல்களேயுடையது இவ்வூர். அழகிய மாடங்கள் உண்டு. தென்றல் காற்று வீசும் இப்பதி சிறப்புப் பொருங் தியது.

இறைவன் சலந்தராசூரனைக் கொல்லக் கைக்கொண்ட படை சக்கரமாகும். இதனேயே திருமால் இறைவனே வழிபட்டுப் பெற்றுக்கொண்டனர்.