பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

இத்தலத்து இறைவர் பழம்பதி நாதேஸ்வரர், விருத்த புரீஸ்வரர் எனப்படுவர். தேவியார் பரங்கருணை நாயகியம் மையார் ஆவர். இத்தலத்து விருட்சங்கள் புன்னே, மகிழம். அங்குள்ள தீர்த்தங்கள் இலட்சுமி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம். இவை கோயிலுக்கு எதிரில் உள்ளன.

இத்தலம் அறந்தாங்கி ரயில் கிலேயத்திலிருந்து 21 கல் தொலைவில் இருக்கிறது. திருவாடானைத் தலத்திலிருந்து சென்ருல் வடக்கே 1:கல்தொலைவில் இதனை அடையலாம்.

குறிப்பு அறந்தாங்கி ரயில் கிலேயத்திலிருந்து ஏழு கல் கற்சாலை வழியைக் கடந்தால் மாணிக்கவாசகர் கட்டி யருளிய திருப்பெருந்துறை என்னும் தலத்தைத் தரிசிக்க லாம். மிகப் பெரிய தலம். சிற்ப ஓவிய வேலைப்பாடுகள் நிறைந்த தலம். திருவாவடுதுறைக் குருமகா சங்கிதானத்தின் திருக்கண் பார்வையால் சிறப்புடன் கித்திய நைமித்தி யங்கள் ஒழுங்காக நடைபெற்று வரும் தலம். இன்றும் 1ே வது குருமகா சங்கிதானமாக விளங்கும் நீலறுநீ சுப்பிர மணிய தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இத்தலத்தை வாரம் தவருமல் வியாழக்கிழமை தோறும் சென்று கரி சித்து வருகின்றனர். இங்கு மாணிக்கவாசகர் சுவாமிகட்கு இறைவர் தங்கியிருந்து உபதேசம் செய்த குருந்த மரத் தையும் கண்டு தரிசிக்கலாம். பராசர், பிருகு முதலியோர் பூசித்த இடம். சுவாமி ஆத்மநாதர், தேவியார் உமா தேவியார்: தீர்த்தம் சிவகங்கை.

தேவியார் யோகம் புரிகின்ருர் என்ற காரணத்தால், கேரே கண்டு தரிசிக்கும் வாய்ப்புக் கிடைக்கப் பெருமல், ஒரு துவாரத்தின் வழியே தான் தரிசிக்க வேண்டும். இத் கலத்தில் கடக்கும் பிரம்மோற்சவச் சிறப்பு மாணிக்கவாச கருக்கேயாகும். நீர் வளம், கில வளம் சிறந்த தலம், மிகப் பெரிய தலம். இங்கு செல்லப் பஸ் வசதியுண்டு. இங்கு இருந்து திருப்புவனவாயில் 14 கல் தொலைவாகும்.