பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

இருக்கிறது. இதனை "அன்பராய்ப் புக்கார் போற்று ஒழியாப் புனவாயில்” என்ற அடி அறிவிக்கின்றது. இப் புனவாயிலைச் சுற்றிக் கற்குன்றுகளும், புதல்களும், பரந்த கடுமையான வெற்றிடங்களும் காணப்படும். இப்போதும் இத்தலத்தை அடையும்போது பார்க்கலாம். கட ற்கரைச் சோலை பொலிவழிந்து காணப்படும். இங்குள்ள வேடர்கள் மான் வேட்டை ஆடுவர். அப்போது மான் கூட்டம் அவ் வேடுவர்கட்குப் பயந்து ஒளிந்துகொள்ளும் தோற்றம் இரக்கங் தருவதாகும். இத்தலத்தில் கள்ளி மரமும் உண்டு. இதன் கிளைகள் நீண்டிருக்கும். இக்கிளைகளில் ஆன் ւմ (որ ஏறிக்கொண்டு தன்னைப் பிரிந்திருந்த பெண் புருவைக் கூவி அழைக்கும் இன்குரலேயும் கேட்டு மகிழலாம். இப் பதியினை உலகப்பாசம் அற்றவர் பாடி கின்று, களிப்பால் ஆடியும் போற்றுவர். காலை மாலை ஆகிய இரண்டு வேஆள களில் வந்து அன்பர் வணங்குவர். அக்கம் பக்கத்தில் கிராம தேவதையை வணங்குபவர் உடுக்கை கொட்டும் முழக்கம் முழங்குவதையும் கேட்கலாம்.

திருப்புனவாயிலில் வெயில் மிகுதி. அங்குள்ள கள்ளி மரம் உலர்ந்து, புற்கள் எல்லாம் தீர்ந்து இருக்கும் காலத்தில் மர்ன் கூட்டங்கள் கடற்கரையிலாகிலும் சென்று தங்கிக் காலம் கழிப்போம் என்று அக்கடற்கரைச் சோலையில் சென்று புகுந்து கொள்ளும். இரவுக் காலங்களில் பன்றிகள் பூமியைத் தம் கூர்மையான கொம்புகளால் தோண்டி எடுக்க, பாதாளலோகத்தில் உள்ள பாம்பின் மணிகள் நெருப்பைப்போல ஒளி விட்டுக்கொண்டிருக்கும். கற்களுக்கு இடையே முளைத்த புதர்களில் உள்ள புற்றில் காட்டுக்கோழிகள் ஏறி நின்று "கூகூ" என்று கத்திக் கொண்டிருக்கும். மரப்பொந்துகளில் ஆங்தைகள் கத்திக் கொண்டிருக்கும்.