பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6?

செய்திகளேத் தேவாரப் பதிகங்கள் நமக்குத் தெற்றத் தெளிய விளக்குகின்றன.

இலிங்கஸ்தாபனத்தின் பொருட்டு இலிங்கம் கொணர அனுமன் காசிக்குச் சென்ருன். அவன் இலிங்கம் கொணரத் தாமதம் ஆயிற்று. ஆகவே, சீதை மணலேயே இலிங்கமாகக் குவித்துச் செய்ய, அதனேயே இராமன் பூசித்தான். இதுவே இராமலிங்கம். பின்னர் அனுமான் கொணர்ந்த இலிங்கம் இவ்விலிங்கத்திற்கு வடபக்கம் பிரதிஷ்டை செய்யப் பட்டது. இது காசி விஸ்வநாதர் எனப்படும்.

இங்கு இலக்குமியை மணந்த சேதுமாதவர் சங்கிதியும் கண்டு தரிசித்ததற்குரியது. இத்தலம் சேது என்றும் கூறப் படும். இராமன் இலங்கைச்குச் செல்ல இங்கு அணே (சேது) கட்டிய காரணத்தால் இது சேது என்று கூறப்படுகிறது.

இத்தலம் தீர்த்த மகிமையுடையது. கோவிலுக் குள்ளேயே 14 தீர்த்தங்கள் இருக்கின்றன. இத்தலத்துக் கோயில் மிக மிகப் பெரியது. பெரிய பெரிய பிரகாரங்களே யுடையது. மேற்குக் கோபுரத்திற்கு அருகில் பாதாள ஸ்வாமி கோவில் ஒனறு உண்டு. மிகப் பழமையான கோவில். இராமேஸ்வரத்தில் உள்ள இறைவரும் இறைவி யாரும் கிழக்கு நோக்கி இருந்து காட்சி அளிக்கின்றனர். இங்குள்ள சேதுமாதவரையும், கணேசமூர்த்தியையும் உற்றுக் கவனித்தால், அவை மணற்கல்லால் செய்யப்பட் டவை என்பது புலகுைம். அச்சிலேகள் உதிர்ந்துகொண்டு வருவதையும் காணலாம். சொக்கட்டான் மண்டபம் பார்க்கத்தக்து. இந்த மண்டபம் எங்கும் எவ்விடத்தும் காணக்கூடாத அதி அற்புதமான மண்டபம். இம்மண்ட பத்தில் இறைவர் அமர்ந்து அன்பர்கட்குக் காட்சி அளிக் கும் காலம், கண்டுகளித்தற்குரிய காலமாகும்.

மண்டபங்களிலும், பிரகாரங்களிலும் இராமநாதபுர சேதுபதிகளின் உருவங்களைக் காணலாம். மேற்குக்