பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

மூன்ரும் திருமுறை பதிகம் 10 பண் காந்தார பஞ்சமம் 1. அலைவளர் தண்மதியோ டயலேயடக் கியுமை முலைவளர் பாகமுயங் கவல்லமுதல வன்முனி இலைவளர் தாழைகள்விம் முகானல்இரா. மேச்சரம் தலைவளர் கோல நல்மா லையன்தான் இருந் தாட்சியே.

(அ. சொ.) அகல-அலைகளையுடைய கங்கையை, தண் மதி-குளிர்ந்த சந்திரன், முயங்க-தழுவ, விம்மு-மிகுதியாக நிறைந்துள்ள, கானல்-கடற்கரைச் சோலை, கோலம்-அழகு. 2. தேவியை வவ்வியதென் இலங்கைத்தச மாமுகன் பூவிய லும்முடிபொன் றுவித்தபழி போயற ஏவிய லும்சிலைஅண் ணல்செய்தஇரா மேச்சரம் மேவிய சிந்தையினுர் கள் தம்மேல்வினை வீடுமே.

(அ. சொ.) தேவி-சீதை, தசமாமுகன்-பத்துத் தலை களையுடைய இராவணன், இயலும்-பொருந்தும், பொன் றுவித்த_அழித்திட்ட, ஏ-அம்பு, சிலே-வில், அண்ணல்இராமன், (பெருமையில் சிறந்தவன்) மேவிய-பொருந்திய, வினை-தீவினை, வீடுமே-அழியுமே. 3. பகலவன் மீதியங்கா மைக்காத் தோன்பதி யோன்தனை இகலழி வித்தவ னேத்துகோ யில்இரா. மேச்சரம் புகலியுள் ஞானசம் பந்தன்சொன் ன தமிழ் புந்தியால் அகலிடம் எங்கும்நின் றேத்தவல் லார்க்கில்லை அல்லலே. (அ. சொ) பகலவன்-சூரியன், மீது-தன் நகரின் மேலே, இயங்காமை-சஞ்சரிக்காமல் படி, காத்தோன்-தடுத் தவனகிய இராவணன், இகல்-வலி, அழிவித்தவன்-அழி யச் செய்த இராமன், ஏத்து-போற்றும், புகலியுள்-சீர்காழி யுள், புந்தியால்-அறிவில்ை, அல்லல்-துன்பம்.

இப்பதிகத்தால் இராமேச்சுரம் இராமனுல் பூசிக்கப் பட்டது என்பதும், அவ்வாறு பூசிக்கப்பட்டதன் கோக்கம்

5