பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

போற்றிலுைம், அவர்கட்குத் துன்பம் இல்லை என்றும் அறிவிக்கின்ருர். இதல்ை இராமேஸ்வரம் போகாமலே இவ்விராமேஸ்வரப் பதிகத்தை ஒதினலே போதுமானது. அதுவே துன்பம் போக்கும் என்பது தெரிகிறது.

இப்பதிகத்தால் இராமனைப் பற்றிய அரிய சில குறிப் புக்களே உணரலாம். அவை இராமன் பெருமையில் சிறந்த வன், சிறந்த வில்லாளி, குற்றமற்ற புகழுடையவன், கடல் அடைத்து இலங்கைக்குச் செல்ல வழி கண்டவன் என்பன.

இராவணனைப் பற்றி இப்பதிகத்தால் நாம் அறிவன, சீதையை மாயையால் காட்டில் வவ்வியவன், காமவேட் கையே காரணமாக வவ்வியவன், சனி, புதன், சூரியன் சுக்கிரன், சந்திரன் முதலான கிரகங்கட்குக் கோபம் வரும் படி நடந்து மகிழ்ந்தவன், (ஏனேய கிரகங்களையும் கூட்டிக் கொள்ளவும்) சூரியன் தன் ககர்மீது செல்லாதவாறு அவனுக்கு உத்தரவிட்டவன் என்பன.

'ஏத்தும்மாந்தர்.பிணி பேருமே," "பாதம் ஏத்தத் துயர் நீங்குமே" "செல்வனே ஏத்திவாழ்மின் அருளாகவே' 'ஏத்த வல்லார்க்கு இல்லே அல்லலே” என்பன அருங் தொடர்கள்

மூன்ரும் திருமுறை பதிகம் 100 பண்-பழம் பஞ்சுரம் திரிதரு மாமணி நாகம் ஆடத் திளைத்தொரு தீயழல்வாய் நரிகதிக் கஎரி ஏந்தி ஆடும் நலமேதெ ரிருந்துணர்வார் எரிகதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச் சரமேய விரிகதிர் வெண்பிறை மல்கு சென்னி விமலர் செயும்செயலே. (அ. சொ.) மா-சிறந்த, மணி-இரத்தினம் இருக்கப் பெற்ற, திளைத்து-மகிழ்ந்து, கதிக்க-நடக்க, தீயழல்வாய் சுடலையில், எரி-மழுவாயுதம், எரி-திபோல, கதிர்ஒளிவிடும் இலங்கு - விளங்கு, கானல் - கடற்கரைச் சோலே, மல்குகிறையும், விமலர்-மலரகிதரான இறைவர்.