பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

தேவியை வவ்விய மென்இலங் கைஅரையன் தன் திறல்வாட்டி ஏவியல் வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச் சரத்தாரை நாவியல் ஞான சம்பந் தன்நல்லமொழி யால்ந வின்றேத்தும் பாவில் மாலை வல்லார் அவர்தம்வினை ஆயின பற்றறுமே.

(அ. சொ.) தேவியை-சீதையை, வவ்விய-கவர்ந்த, அரையன்- அரசனை இராவணன், திறல் - வன்மை, ஏஅம்பு, இயல்-பொருக்திய, வெஞ்சிலை-கொடிய வில், அண் ணல்-பெருமை மிக்க இராமன், கண்ணும்-சேரும், நாட நாவன்மை, கவின்று-சொல்லி, ஏத்தும்-போற்றும், பாபாடல்களால், இயல்-அமைந்த, மாலை-பாமாலை, பற்றுட பந்தம். -

இப்பதிகத்தால் அறியப்படுவன கீழ்வருவன: இரா மேச்சரம் கடற்கரைத் தலம். ஆதலின், கடலில் சங்கும் சிப்பியும் மிகுதி. அவைகள் முத்துக்களைக் கரையில் ஈன்று செல்ல, அம் முத்துக்கள் ஒளி வீசிக்கொண்டிருக்கும். கடற் கரைச் சோலைகளும் உண்டு. அலைகள் கரையில் வந்து மோதிப் பின் செல்லும் அழகைக் காணலாம். தாழைகள் தம் இலைகளை மலர்த்தி விளங்கும். பக்கங்களில் சோலை களும் உண்டு. அங்கு மலர்கள் மலர்ந்து மணம் வீசிக் கொண்டு, வண்டுகள் பாடுதலே நுகரும்போதும், கேட்கும் போதும் இன்பம் தோன்றும். வண்டுகள் பாடல் யாழ் இசைபோல இருக்கும். இணைந்த மலர்களில் அன்னங்களும் அமர்ந்து காட்சி அளிக்கும்.

ஈண்டுள இறைவியார் திருப்பெயர் மலைவளர் காதலி என்பதை இப்பதிக மூன்ரும் பாடல் நன்கு அறிவித்து கிற்கிறது. இதுவே வடமொழியாளர்களால் பர்வத வர்த் தனி என்று தம் மொழியில் பெயர்த்து எழுதிக் கொள்ளப் பட்டதாகும். இறைவர் கரங்தை மலரையும் சூடுவர்.

இராமேச்சரம் குற்றமற்றவர் வணங்கிப் போற்றி வாழ்த்தும் இடம் என்றும், கல்லோர்கள் எக்காலத்தும்