பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

9. திருவாடானை

இது பாண்டிய நாட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்பதாவதாகும். இதனைத் திருஞானசம்பந்தர் ஒரு வரே பாடியுள்ளார். ஆகவே, இதற்குப் பதிகம் ஒன்றே. இதனை அஜகஜபுரம் என்று வடமொழியாளர் கூறிக்கொள் வர். (அஜம்-ஆடு, கஜம்-யானை) ஒரு சமயம் பிருகு முனிவர் துர்வாசரைக் காணச் சென்ருர். சென்றவர் அவருக்கு வணக்கம் செலுத்திலர். அதனல் கோபங் கொண்ட துர்வாசகர், பிருகு முனிவரை ஆட்டுத் தலையும், யானை யுடலும் பெறுமாறு சபிக்க, அவ்வுருவுடன் இத்தலத்தை அடைந்து இறைவரைப் பூசித்து அச்சாபம் நீங்கப் பெற் ருர். இதுவே இத்தலம் இப் பெயர் பெற்றதற்குக் காரணம். சூரியன் லே ரத்னத்தைச் சிவலிங்கமாகப் பிரதிஷ்டை செய்து பூசித்தான். இதன் காரணமாக இவ்விலிங்க மூர்த்திக்கு ஆதிரத்னேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. கோயில் பெரியது.

இத்தலத்து விருட்சம் வில்வம், தீர்த்தம் சூரிய தீர்த் தம். இது திருக்கோயிலுக்கு வடகிழக்கில் உள்ளது. இறைவர் ஆடானே காதர், அஜகஜேஸ்வரர், ஆதிரத்னேஸ் வரர் என்றும், இறைவியார் அம்பாயிரவல்லி, சினேகவல்லி என்றும் பெயர் பெறுவர்.

இத்தலத்தை அடையப் பல வழிகள் உண்டு. தேவ கோட்டை ரயில் கிலேயத்திலிருந்து 33 கல் தொலைவிலும், காரைக்குடி ரயில் கிலேயத்திலிருந்து 88 கல் தொலைவிலும், பரமக்குடி ரயில் கிலேயத்திலிருந்து 83 கல் தொலைவிலும், இராமநாதபுரத்திலிருந்து 83 கல் தொலைவிலும், அரங் தாங்கியிலிருந்து 80 கல் தொலைவிலும், காளேயார் கோவிலி லிருந்து கிழக்கே 31 கல் தொலைவிலும், திருப்புனவாயிலி லிருந்து தெற்கே மட்சாலையில் 13 கல் தொலைவிலும் உள் ளது. இவ் வழிகள்,எல்லாம் பஸ் வசதிகளைப்பெற்றவை.