பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இரண்டாம் திருமுறை பதிகம் 112 பண்-கட்டராகம்

1. மாதொர் கூறுகந் தேற தேறிய

ஆதி யான்உறை ஆடா னை

போதி னுல்புனைந் தேத்து வார்தமை

வாதி யாவினை மாயு மே

(அ. சொ.) மாது-உமாதேவி, கூறு-பாகம், உகந்துவிரும்பி, எறு-இரவு பம், உறை-வாழ் இடம், போது-மலர், புனைந்து-மாலேயாகக் கட்டி, ஏத்துவார்-போற்றுவார். 2. வீடி னுமலி வேங்க பத்துநின்

ருட் லானுறை ஆடா னை

நாடி ஞானசம் பந்தன் செந்தமிழ்

பாட் நோய்பிணி பாறு மே

(அ. சொ.) வீடினர்-இறந்தவர், மலி-மிகுந்த, வேங் கடம்-சுடலை, வேம்--கடம்-வேகும்+காடு, பிணி-நோய், கோய்-துன்பம் செய்யும், பாறுமே-நீங்குமே.

இப்பதிகத்தால்"யார் திருவாடானே என்னும் தலத்தை மலர்கொண்டு போற்றுகின்ருர்களோ, அவர்களைத் தீவினை கள் துன்புறுத்தாது அவை நீங்கும். துன்பக்தரும் நோய் ஒழியும். துன்பம் நீங்கும்; முன்செய்த பாவங்கள் நீங்கும்' என்பன போன்ற கருத்துக்கள் பொருந்தியுள்ளன. இப் பதிகம் வழிபடும் முறையில் மலர்கொண்டு வழிபடுதலே சிறந்தது என்பதையும், அம்மலர்களும் நன்கு மலர்ந்த மலர்களாகவும், கல்ல அழகும் கிறமும் கொண்டனவாகவும் தேன் கிறைந்தனவாகவும், கல்லனவாகவும், சிறந்தனவாக வும், ம்ணமுள்ளனவாகவும், தூய்மை (சுத்தம்) உடையன வாகவும் இருக்கவேண்டும் என்பதையும் நமக்கு நன்கு அறிவிக்கின்றது.

திருவாடானே நீர்வளமும் உடையது. அதனல் தான் “தண்புனல் குடானே' என்று சிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்