பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8

ஒரு பாண்டியன் பொருட்டுக் கால்மாறி ஆடிய குறிப்பினைக் காட்டுவதாகும். கிளிக்கூண்டு மண்டபம்: இதில் பஞ்சவர்ணக் கிளிகள் வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கருங்கல் தூண்களில் பஞ்சபாண்டவர் உருவங்களைக் காணலாம்.


முக்குறுணி விநாயகர் : இவர் மிகப் பெரிய உருவுடன் திகழ்கிறார். இவருக்கு ஒவ்வோர் ஆண்டும், விநாயகர் சதுர்த்தியன்று முக்குறுணி அளவு அரிசியினல் ஒரேகொழுக் கட்டை செய்து நிவேதனம் செய்யப்படுகிறது. பதினாறு கால் மண்டபத்தில் உள்ள வீரபத்ரமூர்த்தி, காளி, பத்திர காளி உருவங்கள் பார்க்கத்தக்கவை. சுவாமி சந்தியின் வாயிலில் எத்தலத்திலும் காணப்படாத காயத்ரி, சாவித்திரி மந்திரங்களின் சிலைகள் உள்ளன.


எல்லாம் வல்ல சித்தர் கோயில், சங்கப் புலவர்களை வைத்திருக்கும் மண்டபம், சாட்சி சொன்ன வன்னிமரம், கிணறு, லிங்கம் முதலியனவும் பார்க்கவேண்டியவைகள். மீனட்சியம்மன் கோயிலுக்குக் கீழ்க்கோபுரத்தருகே உள்ள மதுரைவீரன் கோயிலையும் பார்த்தல் வேண்டும்.


மதுரைத் தலத்து இறைவர் சொக்கலிங்கமூர்த்தி, சோமசுந்தரர், அடியார்க்கு நல்லான் முதலிய பெயர்களால் குறிப்பிடப்படுவார். மதிஅழகர் என்னும் தமிழ்ப் பெயரே சோமசுந்தரர் என்று மொழி பெயர்க்கப்பட்டது.


இறைவியார் திருப்பெயர்கள்: அபிஷேகவல்லி, தமிழ் அறியும் பெருமாட்டி, அங்கயற்கண்ணி என்பன. அங்கயற்கண்ணி என்பதே மீனாட்சி என்று மொழி பெயர்க்கப்பட்டது. தேவாரத்தில் அங்கயற்கண்ணி என்றே உள்ளது. விநாயகர், சித்திவிநாயகர், தலவிநாயகர். இத்தலத்துக்கு உரிய தலவிருட்சம் கடம்பு: தீர்த்தம், பொற்ருமரைக்குளம்; எழுகடல், வைகை.வைகையாறு. மதுரையை அழகு செய்யும் இடங்களில் வைகையாறும் ஒன்று. இத்