பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

தாமரை, பரிசு-தன்மை, இறைவர் திருமேனி செம்மை கிற மாதலின், செந்தாமரை ஈண்டு அத்திருமேனிக்கு உவமை யாயிற்று, வானவர்கள் - தேவர்கள், பூசல் - ஆரவாரம். கொண்டல் - மேகம், கோலம் - அழகிய, கார் - கார்கெல் வளரும்.

2. நாறுட்ை மாடெனவே நன்மைதரும் பரனே

நற்பதம் என்றுணர்வார் சொற்பதமார் சிவனைத்

தேனிடை இன்னமுதை மற்றதனில் தெளிவைத்

தேவர்கள் நாயகனைப் பூவுயர்சென் னியனை

வானிடை மாநடன்என் றெய்வதென் றுகொலோ மருத மும்மணலும் மண்டலமும் ஆய

கானிடை மாநடன்என் றெய்துரிதென் றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறைகா ளையையே

(அ. சொ.) மாடு-பொன். மா-பெரிய, மதி-சந்திரனே, மாசு-குற்றம், மாருதம்-காற்று.

இறைவர் சுந்தரர் கனவில் வந்து கூறிச் சென்ற பின் 'இறைவரை எப்பொழுது கண்டு தொழுவேன்” என்று அவர் கருதிப் பாடலைப் பாடியுள்ளார். சுந்தரர் இறைவரை மலர் கொண்டு வழிபட்டு அல்லல் திரவே விரும்பி இருந் தார். இத்தலத்தில் இவருக்குத் திருத்தில்லை நடனக்காட்சி காணவேண்டும் என்னும் விருப்பமும் ஏற்படுகிறது. இறைவர் மூவர் உருவமும் தம் உருவராகக் கொண்டு மூல முதற் கருவாகவும் உள்ளார். இறைவர் இறத்தற்குக் காரணமான நஞ்சை யுண்டும் இறவாதிருந்தார் என்னும் கருத்தைக் கூறி இறைவரது முழுமுதல் தன்மை ஈண்டுக் குறிப்பிடப் பட்டிருப்பதை யுணரவும்.

சுந்தரர் பொருட்டு இறைவர் துாது சென்றதும், இறைவர் இவரைத் தோழாராகக் கொண்டதும் இப்பதிகத் தில் குறிப்பிடப்பட்டுள்ளன. 'துரதனே என்தனை ஆள் தோழனை' என்னும் தொடரைக் காண்க. இதன் மூலம்