பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

பவர் மனத்தில் உறைபவர் என்பதும் கூறப்பட்டுள்ளது. திருப்பூவணம் சீருடையது என்பதும் இதல்ை அறியலாம். இப்பதிகத்தைப் பாடுபவர் பாவம் அறுப்பர் என்றும் அறிக. திருவிசைப்பா திருவருள் புரிந்தாள் ஈண்டு கொண்டிங்கன்

சிறியனுக் கினியது காட்டிப் பெரிதருள் புரிந்தானந்த மேதருநின்

பெருமையில் பெரியதொன் றுளதே மருதர சிருங்கோங்கின் மரஞ் சாடி

வரைவளம் கவர்ந்திழி வையைப் பொருதிரை மருங்கோங்கா வணவீதிப் பூவணம் கோயில் கொண்டாயே

(அ. சொ.) ஆளாண்டு-ஆளாக ஆட்கொண்டு, உளதோ-இருக்கிறதா? மருது, அரசு, கோங்கு-இவை மரப் பெயர்கள். சாடி-முறித்து, வரைவளம்-மலைபடு பொருள் களின் வளங்களே, இழி-பாயும், பொரு-கரையை மோதும், திரை-அலே, மருங்கு-பக்கத்தே, ஆவணம்-கடை.

12. திருச்சுழியில்

இது பாண்டிய காட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் பன்னிரண்டாவது. இதற்குச் சுந்தரர் பாடிய பதிகம் ஒன்றே உளது. சாதாகந்த முனிவர் பூசித்துப் பேறுபெற்ற தலம். பார்வதி தேவியார் தம்மை இறைவர் மணக்க வேண்டிப் பூசித்த தலமும் ஆகும். கோவில் பெரிதாக உள்ளது. கடராஜர் உருவம் சிலையில் அமைந்ததைக் கண்டுகளிக்கலாம். இத்தலத்து இறைவர் திருமேனி நாதர் என்பதை இத்தலப் பதிகத்தும் குறிப்பிட்டிருப்பதால் காணலாம். இறைவர் திருமேனி நாதேஸ்வரர் என்றும், தேவியார் துணைமாலை அம்மை வனமாலை அம்மை என்றும் கூறப்பெறுவர்.