பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9

தலத்திற்குரிய தேவாரப் பதிகங்கள் பதினொன்று: திருவாசகப் பாடல்களும் உண்டு.


திருஞானசம்பந்தர் இத்தலத்தைப் பாடிய பதிகம் முதல் திருமுறையில் ஒன்று. இரண்டாம் திருமுறையில் மூன்று, மூன்றாம் திருமுறையில் ஆறு. திருநாவுக்கரசர் இத்தலத்தைப் பற்றிப் பாடிய பதிகம் ஆறாம் திருமுறையில் ஒன்று. சுந்தரர் இத்தலத்தைப் பற்றிய பாடிய பாடல் அகப்பட்டிளது.


மதுரைமா நகரில் பார்க்கவேண்டிய இடங்கள் : திரு மலேகாயக்கன் மகால், மாரியம்மன் தெப்பக்குளம், இக்குளத்திற்கு எதிரே உள்ள கருமுத்து, தியாகராய செட்டியார் பார்வையில் நடைபெறும் கலைக்கல்லூரி, ஸ்டேஷன் எதிரில் உள்ள மங்கம்மாள் சத்திரம், கூடல் அழகர் பெருமாள் கோயில் முதலியன. போக்கு வரவுக்கு வேண்டிய வண்டி வசதிகள் பலவுண்டு.


மதுரையம்பதியில் நடைபெறும் திருவிழாக்கள் பல வாயினும் அவற்றுள் கண்டுகளிக்க வேண்டிய திருவிழாக்கள் சில உண்டு. அவையே சித்திரை மாதம் கடை பெறும் சைத்ரோற்சவம். இதில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் விசேஷமானது. தைமாதம் நடைபெறும் தெப்போற்சவம். இது மாரியம்மன் தெப்பக்குளம் என்னும் வண்டியூர்த் தெப்பக்குளத்தில் நடைபெறும். ஆவணி மாதம் கடை பெறும் ஆவணி மூல உற்சவம். இதில் பிட்டுக்கு மண்சுமந்த உற்சவம் சிறப்புடையது. மார்கழி மாதம் நடைபெறும் படி அளக்கும் உற்சவமும் சிறப்புடையது.


மதுரையம்பதி ஆலயம் மதுரை ஸ்டேஷனுக்குக் கிழக்கே கல்சாலையில் முக்கால் மைலில் உள்ளது. மதுரையிலிருந்து பஸ் மூலம், கல்லழகர் கோவிலையும் சென்று தரிசிக்கலாம். இது வைஷ்ணவ தலமாயிப்போது இருந்தாலும்,