பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன்...பள்ளித் துஞ்சிய நன்மாறன்

93

இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லே
இரப்போர் வாட்ட லன்றியும் புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயில் அத்தை;
அனைத்தா கியரினி யிதுவே; எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம்; அதனால்,
நோயில ராகநின் புதல்வர்; யானும்
வெயிலென முனியேன் பனியென மடியேன்
கல்குயின் றன்னவென் னல்கூர் வளிமறை
நாணல தில்லாக் கற்பின் வாணுதல்
மெல்லியற் குறுமக ளுள்ளிச்

செல்வல் அத்தை சிறக்கநின் னாளே.”[1]

இச்செய்யுளைக் கேட்டதும் பாண்டியன் தனது குற்றத்தை யறிந்து, புலவர்க்கு ஏற்ற பரிசில் தந்து, விடை கொடுத்தனுப்பினன். ஆவூர் மூலங்கிழார் சோழ நாடு சேர்ந்தார்.

பின்னரும் பாண்டியன் முன்போல ஆயினன். ஒருவர் மனத்தை மாற்றுவது என்பது மற்றொருவர்க்கு எளிதன்று. அவரவரே தம் அறிவின் திறத்தால் மாற்றிக்கொள்வது எளிதாம். பாண்டியன் நன்மாறனோ, புலவர்களைக் கண்டு பயின்று அநேக ஆண்டுகள் ஆய்விட்டதால், அவர்களிடம் உள்ள பெருமையை அளந்தறியும் அறிவையே இழந்துவிட்டான். அரசன் அவ்வாறு ஆனதால், மன்னரைச் சார்ந்தொழுகுவார் பலரும் புலவர்களை அரண்மனைக்குள் வரவேற்கும் பண்டைப் பழக்கத்தைக் கைவிட லாயினர்.

——————————————————————

  1. புறநானூறு - செய்யுள், 196.