பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன்...பள்ளித் துஞ்சிய நன்மாறன்

95


அரசன் மனம் இரங்குவதாய்த் தோன்றவில்லை. அதனால், அவர் மிக்க வெறுப்புக் கொண்டு, பின் வருமாறு பேசினர்:

"விரைந்து செல்லும் குதிரைப் படையையுடைய நன்மாறனே, திண்ணிய தேர்களையுடைய தலைவனே, உன்னைப் பாராட்டி, அருவி பாயும் பெரிய மலைபோல மாலையொடு விளங்கும் உன் மார்பகத்துக் குறையாத அன்புடைய தெய்வக் கற்புள்ள நின் கோப்பெருந்தேவி பயந்த பவளமணி போன்ற அழகிய வாயையுடைய கிண்கிணிக் காலினராகிய உனது புதல்வர் பொலிக என்று வாழ்த்தி, உன்னிடம் கொண்ட பக்திப் பெருக்கால் கனாப் பொழுதிலும் அரற்றுகின்ற எம் மனம் மிகவும் இன்புற்று மகிழ ஆல் அமர்ந்த கடவுள் போன்ற நினது செல்வத்தை யெல்லாம் கண்டோம்; விடை பெற்றுக் கொண்டோம்; வேல் கெழு குரிசில், வாழ்க நின் கண்ணி; தொடுத்த தமிழ் நாட்டெல்லை முழுவதும் கொள்ளையாகக் கொண்டு நின் பகைவரை வணங்குவித்து அவர் பொருளை வாங்கி யுண்ணும் குறைவற்ற வலி மிக்க நின் போன்ற திறல் சிறந்த நின்னுடைய மைந்தர் கண்ணோட்டத்தால் எந்நாளும் பகைவர் வாட அவரது அருங்கலங்களைக் கைக்கொண்டு நுமது பொன்மயமான பெரு நகரிற் சேர்ந்த உன் முன்னோர்களைப் போல நீயும் ஆண்டும் நாளும் மிகுந்து, திரைகள் மிக்க பெரிய கடனீரினும் அக்கடல் கொழிக்கும் மணலினும் நீண்டுயர்ந்த மழைத் துளியினும் மிகுதியாக இவர் பெறும் பிள்ளைகளைக் காணுந்தோறும் மகிழ்ந்து விரும்பிச் செல்வத்தோடு புகழும் இனிது விளங்க நெடுங்காலம்வாழ்க. பெருந்தகையே, யாமும் உறவினரில்லாத தூரதேசத்திலே நாடோறும் மழைத் துளியை விரும்பி எதிர்பார்க்கும் வானம்பாடிப் பறவைபோல உன்னுடைய வண்மையை எதிர் பார்க்கும் ஆசையால் மனம்