பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

பாண்டிய மன்னர்

புகுந்து சாய்வான அணைகளில் சார்ந்து அமர்ந்திருந்து மனக் கவலைகளை மறந்தான்; இடையிடையே சிறு சிறு நீர் நிலைகளில் நாற்பாலுமுள்ள அழகிய பதுமைகள் நீர் நிறைக்கப் பசுமை மிக்க இலைகள் நிரம்பியிருக்கும் அணிகிளர் காட்சியையும் பார்த்துத் திரும்பினான்; என்னதான் வெளிக் காட்சியைக் கண்டாலும், மனத்தினுள் இருந்த தளர்ச்சி இடைவிட்டு எழுந்து எழுந்து தோன்றுவதையும் உணர்ந்தான். இளமாக்காவை அடுத்துள்ள இலவந்திகைக்குச் சென்று இன்புறுவோம் என்று அத்திசை நோக்கினான். அவன் குறிப்பறிந்த மெய் காவலர் முன்னும் பின்னும் சென்றனர். இளமரக் காவிலிருந்து இலவந்திகைச் சோலைக்குச் செல்லும் சிறியதொரு வாயில் வழியே சென்று, அங்குப் புகுந்தான்.

அவ்விலவந்திகைச் சோலை, அரசனும் அவனுக்கு. உரிய பெண்டிரும், அவகாச முள்ள காலங்களில் வந்து இன்பமுறப் பொழுது போக்குவதற்காக அமைந்ததாம்; பெரியதொரு சுற்று மதிலையுடைய தாய், வெளிப் புறத்தார் எவர்க்கும் தன்னுள் அடங்கிய இன்பக் காட்சிகளின், நலத்தை அளியாதிருப்பதாம் அரசனும் உரிமை மகளிரும் அங்கு வருங்காலங்களிலே தங்கியிருத்தற்குரிய சிறிய மாளிகைகள் சில அங்கு இருந்தன. அவர்கள் நீராடி இன்புறற்குரிய சிறிய பொய்கைகள் சில இருந்தன. பல வகையாகிய மணமிக்க மலர்கள் நிரம்பிய மரங்களும் செடிகளும் கொடிகளும் இயற்கை நலந் தோன்ற வளர்ந்திருந்தன. சில இலை அழகின் பொருட்டும், வேறு சில மலர் அழகின் பொருட்-