பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன்...பள்ளித் துஞ்சிய நன்மாறன்

103

இறப்பரிய வின்பநிலை
யெங்ஙனம்யான் எய்துவனே!
இன்பமெனத் துன்பமென
வெண்ணுவன விரண்டுமெனை
வன்பினொடு பிணித்துலகில்
மயக்கமுற வாட்டுவன
அன்பினெறி யுணர்வெளி தாம்
அரும்பொருளை யறிந்தடைய
முன்புமுயன் றறியாதேன்
முயன்றுபயன் பெறலெளிதோ?

“என் முன்னோர் இருந்த நிலையென்ன? இப் பொழுது யான் உள்ள நிலையென்ன! பாரத பூமி முழுதையும் ஒரு குடைக்கீழ் ஆண்டு வந்த பாண்டியர் குடியிற் பிறந்த யான் மிகச் சிறிய நாட்டினையே ஆளும் ஆற்றல் பெற்றவனா யிருந்தேன். எல்லாம் இறைவன் செயல். இனிஎன்வழி வருவோருள் யாவனேனும் சிறந்த வீரன் ஒருவன் என் எண்ணத்தை நிறைவேற்றலுமாம். இந்நாள்காறும் புவிப் பொறை தாங்கியது போதும். இனித் தவவேடம் பூண்டு பாவத்தைக் களைய முயல்வதே சிறப்பாம். இந்த வுடம்பினுள் இன்னும் எத்தனை நாட்களுக்கு யான் வாழவேண்டும் என்ற திருவுள்ளம் இறைவனுக்கு உளதோ? அந்நாள் எல்லாம் அவனையே ஆராய்ந்தறிய முயல்கின்றேன். அவனருளால் அன்றோ அவன் தாள் வணங்கலாம்?” என்று தனக்குட் கூறிக்கொண்டனன்.

பிறகு வானக் காட்சியைக்கண்டு மனமகிழ்ந்தான்; பளிங்குப் பீடத்தில் ஒரு புறமாகச் சாய்ந்தான்; ஏதோ