பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

பாண்டிய மன்னர்

சிறிதளவு மயக்கம் தோன்றுவதாய் உணர்ந்தான். எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளை எண்ணி யெண்ணி இன்புற்றவாறே முக மலர்ச்சி பெருகத் தன்னுணர் விழந்து பரவச மடைந்து, பளிங்குப் பீடத்தின்மேலே ஒரு கை வைத்துக்கொண்டு சிறிது பொழுது நின்று, பிறகு அமர்ந்து, அதன் பின்னர்ப் படுத்துக்கொண் ன்; இறைவன் திருவருள் வசத்தால் அவ்வாறு இருந்த நிலையிலேயே அநித்தியமாகிய இவ்வுலக வாழ்வைத் துறந்தான். உடம்பு சிறிது வேறுபாடு அடைந்தது.

மெய் காவலர் உடனே நெருங்கி வந்து, அரசன் இருந்த நிலையை அறிந்து, உண்மையை உணர்ந்து கொண்டு, அரண்மனைக்குச் செய்தி தெரிவித்து, உரிய முறையால் மேல் நிகழ்தற்குரிய வினைகளை மந்திரிமார் கவனிக்கத் தக்கவாறு செய்தனர். மந்திர சுற்றத்தார் அவன் மைந்தனுக்கு அரசுரிமையை நல்கி, முடி கவித்து, அப்பொழுது செய்தற்குரிய சடங்குகளை நிறைவேற்றி, நன்மாறன் வாழ்வின் வரலாற்றை நாட்டவர் அறியுமாறு விளக்கிக் கூறி, இறைவன் திருவருளால் அவன் இலவந்திகைப் பள்ளியில் துஞ்சிய செய்தியை எங்கணும் பரப்பிப் புதிய அரசனுக்கு உரிய காலத்திலே பட்டாபிஷேகம் நிகழும் என்ற செய்தியையும் தெரிவித்தனர்.

நாடெங்கும் தூதர் சென்று இச்செய்தியைப் பரப்பிப் பலவகைச்சிற்றரசர்களையும் புலவர்களையும் மதுரை நகரத்தில் வந்து குழுமச் செய்தனர். அவரனைவரும், பூரண சந்திரன் அஸ்தமனம் ஆவதைக் கண்ட பிறகு