பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன்...பள்ளித் துஞ்சிய நன்மாறன்

105

இளங்கதிரின் உதயத்தைக் கண்டு மகிழ்வார்போல இளவரசனது வாழ்வின் நோக்கத்தை எடுத்துரைப்பாராய்த் தமிழ்த் தெய்வத்தின் தனித் திருப்பணி புரிய வருவோருள் அவன் தலை சிறந்திருக்கவென வாழ்த்து வாராயினர். நல்லோர் பலர் மனமாரவாழ்த்தி நல்லுரை நவில, இளவரசன் நன்னாளில் முடி கவிக்கப்பெற்றுத் தன் முன்னோர் வழி வழியே தனக்கு வைத்த பேறாகிய அரசுரிமையைத் தாங்குவா னாயினன். அவன் காலத்தில் மேன்மேலும் நாடு வளர்ச்சி பெற்று மிக்க நல்வாழ்வு அடைந்தது.