பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரியப்படை கடந்த ......நெடுஞ்செழியன்

107

எவர்க்கும் அச்சந் தருவதேயாயினும், நான்கு பெருவாயில்களும் ஒற்றராதிய சிலர்க்கு மாத்திரம் அறியலாகும் சிறிய நுழை வாயில்கள் இரண்டும் உளவாம். இவற்றுள் ஒன்றால் உட்புகுவோமாயின், நாம் காணும் காட்சி, வாயிலகத்தே உருவிய வாளுடன் காவல் புரியும் யவன வீரரும் அகத்துள் அரண் காவலர் தொகுதியும் பிறவும் ஆகும். உரிய முறைகளால் அனுமதிப் பத்திரம் பெற்று நகர்க்குட் புகுந்தோ மாயின், ஆயிரங் கண்ணோன் அருங்கலச் செப்பு வாய் திறந்து வைத்தது போன்ற பெருங்காட்சியைக் காண்போம்.

அரச வீதியும் அந்தணர் சேரியும் வேளாளர் சாலைகளும் வணிகர் உறையிடங்களும் அணியணியாய் அமைந்திருக்கக் காண்போம். பொது மகளிர் வீதியும் அங்காடி வீதியும் அதன் உட்பகுதிகளாகிய நவ மணி விற்கும் நலம்பெறு தெருக்களும் நால்வகைப் பொன்னும் பால்வகை பகரும் பொன் வணிகர் தெருக்களும் நூல் மயிர் நுழைநூற் பட்டு முதலியவற்றால் நெய்யப் பெற்ற ஆடைகள் பன்னூற்றுக் கணக்காய் விற்கும் அறுவைவாணிகர் வீதிகளும் மிளகு மூடைகளும் எண் வகைக் கூலமும் குவித்தளக்கும் கூல வாணிகர் கோல வீதியும் வேறு பல தெருக்களும் சந்தியும் சதுக்கமும் மன்றமும் கவலையும் மறுகும் பிறவும் அழகுற அமைந்த மதுரை நகரின் இயற்கை யழகை இன்னதென இயம்பலாகுமோ?

இத்தகைச் சிறப்புடைய பழம்பெருநகரில் தனது முன்னோர் நிறுவிய அரசியலைச் சிறப்புற நடத்தித்தமிழ்