பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரியப்படை கடந்த ..........நெடுஞ்செழியன்

111

திகரைச் சிறை செய்து, சிறைக் கோட்டத் திட்டனர். அச்செய்தியை அறிந்த வார்த்திகர் மனைவி கார்த்திகை யென்பவள் அலந்து ஏங்கி அழுது, நிலத்திற் புரண்டு, புலந்து வருந்தினள். அது கண்டு மதுரை நகர் ஐயை கோயிற் கதவம் திறவாது அடைப்புண்டது. அத்தெய்விகச் செய்தியைக் கேள்வியுற்ற நெடுஞ்செழியன், மிகவும் மனம் வருந்தி, ஏவலரைப் பார்த்து, “கொடுங்கோன்மை நேர்ந்ததோ? கொற்றவை கோயிற் கதவம் அடைப்புண்டதேன்?" என்று கேட்க அவர்கள் அரசனை வணங்கி வார்த்திகரைச் சிறை செய்த உண்மைச் செய்தியைக் கூறினர். அரசன் அது முறையன்று என்று அவர்களைக் கண்டித்து, ”அறியா மாக்கள் செயலால் முறை நிலை மாறி எனது அரசியல் நெறி தவறியது. பொறுத்தருளல் நுமது கடமையாகும், என்று கூறி நிலவள நீர்வள மிக்க திருத்தங்கால் என்ற ஊரையும் வயலூர் என்ற ஊரையும் வேதியர்க்குக் கொடுத்துக் கார்த்திகை கணவராகிய வார்த்திகர் முன்னர் இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கி நமஸ்கரித்தனன். உடனே நகரத்தார் எல்லாரும் அறிய மதுரை நகரத்துக் கலையமர் செல்வி கோயிற் கதவம் திறந்தது. அதன் பின்னர் நெடுஞ்செழியன் ஆணையால் வள்ளுவர் யானை யெருத்தத் தமர்ந்து, ‘இடுபொருளாயினும், படு பொருளாயினும், உற்றவர்க் குறுதி பெற்றவர்க்காம்,’ என்று முர சறைந்தார். நாடெங்கும் தனது செங்கோன்மைச் சிறப்பு விளங்குமாறு அன்று சிறையிலிருந்தார் பலரையும் சிறைவீடு செய்து, வரியிறுத்தற் குரியார்க்கு வரி தரவேண்டா என்று ஆணை தந்து புகழ்பெற்றான்.