பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

II

பாண்டியன் நெடுஞ்செழியன் மதுரையில் அரசாட்சி செய்துகொண்டிருக்கும் காலத்தில், சோழ நாட்டிலே காரிவிப்பூம்பட்டினத்திலே பெருங்குடி வாணிகர் இருவர் மிக்க செல்வமுடையராய் வாழ்ந்துவந்தனர். அவருள் மாசாத்துவான் என்பான் மகன் கோவலன் என்பவனாம். மாநாய்கன் மகள் கண்ணகி என்பவளாம். குல முறைக்கேற்பக் கோவலனுக்கும் கண்ணகிக்கும் இளம்பருவத்திலே திருமணம் நிறைவேறியது. கோவலன் அக்காலத்தில் புகார் நகரத்தில் இருந்த மாதவி என்ற நாடகக் கணிகையிடம் அன்பு பூண்டு, இல்லற வாழ்வை மறந்து, தனது பெருஞ்செல்வத்தை யெல்லாம் அப்பொது மகள் பொருட்டு விரயஞ் செய்வானாயினன். ஒரு நாள் கடலாடச் சென்றிருந்த காலத்தில் மாதவியுங் கோவலனும் மனம் மாறுபட்டனர். அவன் உடனே அங்கு நின்றும் நீங்கிக் கண்ணகியை யடைந்தான்.

கண்ணகி அவன் மனச் சோர்வை யறிந்து, அதன் காரணம் உணர முயன்றனள். கோவலன் பொது மகளிர் உடனுறை வாழ்வை யொழித்துவிட்டதாய் உரைத்து வேற்று நகரங்களுக்குச் சென்று வியாபாரம் செய்து அந்நாள் வரை இழந்த பொருளைத் திரும்பவும் தேடும் கருத்துடையனாயிருப்பதையும் அதற்கு முதற்-