பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரியப்படை கடந்த......நெடுஞ்செழியன்

117

பொருள் இல்லாத குறை யொன்றே உள்ளதையும் குறிப்பாகத் தெரிவித்தான். கண்ணகி சிலம்பினுள் ஒன்றைப் பெற்று அதனை விற்று வியாபார முதலாகக் கொண்டு மதுரை நகரில் தன் குடியினர் அறியா வண்ணம் வாணிகம் செய்து பிழைக்கலாம் என்று கருதியிருப்பதைத் தெரிவித்தனன். கண்ணகி அதற்கு இசைய, அவளையும் உடன் கொண்டு மதுரைக்குப் புறப்பட்டனன், கால் நடையாக நடந்து, வழியிடையிலே கிடைத்த துணையோடு மதுரை வந்து சேர்ந்து, நகர்ப் புறத்தே இருவரும் தங்கினர்:

அங்கிருந்த மாதரி என்ற இடைச்சியிடம், கண்ணகியை அடைக்கலமாக ஒப்படைத்துக் கோவலன் ஒற்றைச் சிலம்பை வியாபாரம் செய்து வர நகர்க்குள் நுழைந்தான். பெருஞ்செல்வர் குடியிற் பிறந்தவன் ஆகையாலும், புகார் நகரத்திருந்து மதுரை நகர் வரையிலும் நடந்து வந்திருந்தானாகையாலும் மிகவும் தளர்ந்த நடையோடு பெருந்தெருவிலே சென்றான். அப்பொழுது பெரியதோர் இமிலேறு அவனை எதிர்த்துப் பாயவந்தது. அதனை அபசகுனம் என்று உணராது மேற் சென்று கடைத்தெருவிற் புகுந்தான். கடைத்தெரு நடுவிலே பொன்னுருக்குவோரும் பணி செய்வோரு மாகிய நூற்றுவர் பொற்கொல்லர் பின்வர அவர்கட்குத் தலைவனாய் அரச மதிப்புப் பெற்றதற்கு அறிகுறியாகச் சட்டையணிந்து ஒதுங்கி நடந்து செல்லும் பெரும்பொற் கொல்லன் ஒருவனைக் கண்டான். அவனைக் கண்டதும் அவன் பாண்டிய மண்டலாதிபதியால் வரிசை பெற்ற பொற்கொல்லனாகும் என்று அறிந்து,