பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

III

மய மலையின் சிகரத்தில், தன் ஆணைக்கு அறிகுறியாய் எழுதிய கயற் குறிக்கு அருகிலே எழுதப் பெற்ற புலியையும் வில்லையும் உடைய சோழர் சேரர் என்ற தமிழமன்னரும் பிறமன்னரும் தன் ஏவல் கேட்ப நிலவுலகம் முழுவதையும் ஆண்ட முத்தமாலை பொருந்திய வெண்கொற்றக் குடையையுடைய பாண்டியன் நெடுஞ்செழியனது அரண்மனையிலே திருப்பள்ளியெழுச்சி முரசம் இயம்பியது. அம்முழக்கத்தைக் கேட்ட மதுரைப் புறஞ்சேரியிலுள்ள ஆய்ப்பாடியில் வாழ்ந்த மாதரி என்பவள், ஐயை என்ற தன் மகளை யழைத்து, கடை கயிறும் மத்தும் கொண்டு தயிர்த் தாழிக்கருகில் வந்து நின்றாள். அவள் தன் மகளைப் பார்த்து, "நமக்கு இன்று அரண்மனைக்கு நெய் அளக்கும் முறையாம். விரைவிலே வேண்டுவன செய்ய வேண்டும், என்று கூறினள்.

பிறகு தயிர்த் தாழிகளைப் பார்த்து, “நாம் பிரையிட்ட பால் தோயவில்லை. நமது மாட்டு மந்தையில் காளைகள் காரண மின்றியே கண்ணீர் உகுக்கின்றன. இவை இங்ஙனம் ஆவதால், நமக்கு வருவதோர் உற்பாதம் உண்டு. மேலும், முதல் நாளைய வெண்ணெய் உருக வைத்தது உருகவில்லை. ஆட்டுக் குட்டிகளும் துள்ளி விளையாடவில்லை. பசுக் கூட்டங்கள் மெய்ந்-