பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

பாண்டிய மன்னர்

னித்துப் பூக்களாற்பூசித்து, வணங்கி நீராடப்போயினாள். அப்பொழுது அந்நகரத்துக்குப் போய்த் திரும்பிய ஓர் இடைப் பெண் தான் அங்குக் கேட்டதொரு செய்தியை ஆயர் சேரியிலே தெரிவிக்க விரைந்து வந்தாள். அவள், கண்ணகியின் இளமையையும் அழகையும் கண்டு, தான் கேட்ட செய்தியை அவளிடம் கூறத் துணியாமல், அயலிலிருந்த ஆயச் சிறுமிகளிடம் கூறி மன வருத்தத்தாற் கண்ணீர் உதிர்த்து நின்றாள்.

அக்காட்சியைக் கண்ட கண்ணகி, தோழியே, யான் நகரத்துட் சென்ற என் காதலர் திரும்பி வரக் காண்கிலேன். நெஞ்சு மிகக் கலங்கி வருந்துகின்றேன். கொல்லுலைக் குருகுபோலப் பெருமூச்சு எழுகின்றது. இன்னது விளைந்தது என்று எனக்குத் தோன்றவில்லை. மதுரையிலே அயலார் பேசிக்கொண்ட தென்ன? தோழியே, கூறாய். நண்பகற் போதிலே உடல் நடுங்கும். நோய் மிகும். அன்பரைக் காணாமையால், என் நெஞ்சு வருந்தும். அங்குளார் கூறியதென்ன? தோழி, இவ்வயலார் சொல்லும் மறை எளிதன்று: என் தலைவரையும் காண்கின்றிலேன். என்னை வஞ்சித்த தொன்றுண்டு. என் நெஞ்சும் மயங்குகின்றது. செய்தி இன்னதென்று கூறாய்," என்று மிக்க துயரத்தோடு கூறினள்.

அதற்கு அவள், “அரசன் வாழும் அந்தப்புரத்தில் இருக்கும் அழகு சிறந்த சிலம்பை வருத்தமின்றிக் கவர்ந்து தன் கையில் வைத்திருந்த கள்வன் இவனேயாம் என்று அரசனேவலர் நினது தலைவரைக் கொன்றனர்,” என்றாள். அது கேட்டதும் கண்ணகி, பொங்கி யெழுந்தாள்; விழுந்தாள்; திங்கள் முகிலோடு நிலத்தில்