பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரியப்படை கடந்த......நெடுஞ்செழியன்

133

செய்தருளிய கானகம் உகந்த காளியும் அல்லள்; தாருகன் மார்பைக் கிழித்த பெண்ணும் அல்லள்; கோபம் கொண்டவள் போலவும் பகைத்தாள் போலவும் தோன்றுகின்றாள்; பொன்னால் அழகுற அமைந்த சிலம்பொன்றை யேந்திய கையினை யுடையளாய்க் கணவனையிழந்தாள் ஒருத்தி வாயிலில் நிற்கின்றாள்; நம் அரண்மனை வாயிலில் நின்று முறையிடுகின்றாள்,” என்று கூறினன். அதைக் கேட்ட பாண்டியன், ‘அவளை இங்கே அழைத்து வருக!’ என்று ஆணையிட்டனன்.

வாயில் காவலன் வாயிலுக்கு வந்து, கண்ணகியை அழைத்துச்சென்று, அரசன் முன் விடுத்தான். அவள் நெருங்கியபோது பாண்டியன் அவளைப் பார்த்து, ‘நீர் வார்ந்த கண்ணுடன் எம் முன் வந்து முறையிடுகின்ற மடக் கொடியே, நீ யார்? உனக்கு எய்திய தென்ன?’ என்று கேட்டான். அதற்கு மறுமொழியாகக் கண்ணகி, “ஆராயாது முறை செய்யும் அரசே, யான் சொல்வது கேட்பாயாக: இகழ்தற்கில்லாத சிறப்பினையுடைய இமையவர் வியக்குமாறு, வல்லூற்றால் புறாவுக்கு நேர்ந்த இடையூற்றை நீக்கும் பொட்டுப் புறாவின் நிறையளவு ஊன் தருவதாகக் கூறித் தன் உடம்பின் தசையை மிகுதியாய் அரிந்து வைத்தும் பற்றாமையால் தானே துலையில் ஏறி நின்று அடைக்கலங் காத்த சிபியும், அரண்மனை வாயிலிற் கட்டி வைத்திருக்கும் ஆராய்ச்சி மணியின் நடு நா நடுங்கும்படி கன்றை யிழந்த பசு அம்மணியைத் தன் கோட்டாற் புடைத்துக் கண்ணீர் சொரிந்து நிற்க அவ்வருத்தத்தைக் காணச்சகியாது மனம்வருந்தித் தான் தனது அரும்பெறற்புதல்வனைத் தேர்ச்சக்கரத்தாற்