பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

பாண்டிய மன்னர்

துரைத்த தன் தலைவன் மூத்த மனைவிக்குத் தான் - மணம் புரிந்த ஊரிலே சான்றாய் இருந்த வன்னி மரமும் மடைப்பள்ளியுமே வந்து தன் உண்மைக் கற்பு” நிலையை விளக்குமாறு செய்த வணிகர் குலக்கொடியும்; காவிரிக் கரையிலே தன்னை யொத்த பெண்களுடன் நீராடி வண்டலயர்ந்துகொண்டிருக்கையில் ஒரு மணற்பாவையைக் காட்டி, ‘இஃதுன் கணவன்,’ என்று பிறர் கூற, அவ்வுரையை அவ்வாறே யேற்றுக்கொண்டு, மனையகம் நோக்கித் திரும்பிய பெண்களொடு திரும்பாது, தண்ணீரலை வந்து அம்மணற் பாவையை அழியா வண்ணம் காவல் செய்து நின்ற இளங்குமரியும்; சோழன் கரிகாற் பெருவளத்தானுக்கு மகளாய்ப் பிறந்து, வஞ்சி வேந்தனாகிய ஆட்டனத்தி என்பானுக்கு வாழ்க்கைப்பட்டுக் காவிரிப் புதுப்புனல் விழாக் காலத்தில் அவனோடு நீராடச் சென்று, அக்காலத்தில் அவனைக் காவிரி இழுத்துக்கொண்டு செல்ல, அது கண்டு பொறாது புலம்பிக்கொண்டே காவிரி செல்லுமிடமெல்லாம் சென்று கடலையடைந்து தேடி அங்குத் தன் கணவனைக் கண்டு, அவனை யழைத்துக்கொண்டு தன்னாடு வந்து அடைந்த ஆதி மந்தி யென்ற கற்பாசியும்; தனது கணவன் திரை கடலோடித் திரவியம் தேடச் சென்றிருந்ததால் அவன் வருங்காறும் வேறு எவர் முகத்திலும் விழியாதிருக்குமாறு கடற்கரை சென்று கலம் வரு திசையை நோக்கிக் கல்லாய்ச் சமைந்து நின்று, அவன் வந்ததும் முன்போல உயிர் பெற்று எழுந்து அவனுடன் மனையகம் வந்து புகுந்த மாதர்க்கரசியும்; தன்னையொத்த மாற்றவள் குழவி