பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

பாண்டிய மன்னர்

மதுராபதி, “அணியிழாய், யான் நின் துயரமும் - அதன் காரணமும் அறிவேன் ; இக்கூடலுக்குரிய மதுராபதி என்பேன்; உண்மையே கூறுவேன்: நின் கணவன் இறந்ததன் பொருட்டு யானும் வருந்துவேனாயினும், பெருந்தகைப்பெண்ணே, யான் சொல்வதொன்று கேட்பாயாக: என் மனம் மிகவும் வருந்துகின்றது. எம் அரசற்கு ஊழ்வினைப்பயன் அனுபவிக்க நேர்ந்த காலத்தில் உன் கணவனுக்குத் தீவினைச் சூழ்ச்சி உண்டாயிற்று. இந்நாள் காறும் எமது தலைவனாகிய பாண்டியன் வேத முழக்கம் கேட்டதுண்டேயன்றி, ஆராய்ச்சி மணியோசை கேட்டறியான். இந்நாட்டுக் குடிகள் இம்மன் எனை அடிதொழுது வாழ்வுபெறாத பிறமன்னரைத் தூற்றுவதுண்டேயன்றி இவனது செங்கோன்மையைப் பற்றிப் பழிதூற்றியதில்லை. நன்னுதல் மடந்தை, நான்சொல்வதை இன்னும் கேட்டி: பெண்டிரது பேதைமை விளங்கும் நோக்கினால், மதமுகம் திறப்புண்டு இடம் கடந்து செல்லும் நெஞ்சத்தையுடைய இளமையெனும் யானை, கல்வியென்ற பாகன் கையில் அகப்படாது அச்சமற்று ஓடுமாயினும், ஒழுக்கத்தொடு சிறந்த இப்பாண்டிய குலத்துப் பிறந்தோர்க்கு இழுக்கம் விளையாது. இதுவும் கேட்பாய்: மிகவும் வறுமை வாழ்வில் வாழ்ந்து வந்த கீரந்தை யென்ற பார்ப்பான் மனைவியின் மனைவாயிற் கதவை, நள்ளிரவில் வேற்றுக் குரல் ஒன்று கேட்பதாய் எண்ணிப் பாண்டியன் குலசேகரன் புடைத்தான். அவ்வோசையைக் கேட்ட மனையகத்திருந்த கணவனும் மனைவியும் வெவ்வேறுவகை மனத்தோற்றம் பெற்றனர். அப்பொழுது அப்பெண்மணி தன் தலை-