பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன் பல்யாகசாலை...பெருவழுதி

7

மருத்துவர், நிமித்திகர், பார்ப்பார் என்ற பல வகையாரும் அரசனிடம் விடை பெற்றுத் தத்தம் இடங்கட்கு ஏகினர். அரசன் தனது அந்தரங்க ஸ்தலத்தில் மெய்காவலன் ஒருவனே அருகில் நிற்க, நின்றுகொண்டு, இறைவன் திருவருளை வியந்து, மனமுறத் தெய்வத் தோத்திரங்களைப் பாடி, மனத்தினுள் உருகிக்கொண்டிருந்தான். ஒற்றருட் சிலர், புதுவராய்த் தம்பதவிகளில் அமர்த்தப்பட்டார். ஆதலால், தத்தமக்குரிய அதிகாரப் பத்திரங்களைப் பெற்றுக்கொண்டு, அயல் நாடுகளுக்கும் உள் நாட்டுக்கும் செல்லக் கருதியவராய்த் தனித்தனியே ஒருவரை ஒருவர் அறியாது, அரசனிடம் ஆணை பெற வந்தனர். சில மறைக் குறிகளால் அவர்களை இன்னார் என அறிந்த அரசன், ஒவ்வொருவரும் தனித்தனியே வந்ததற் கேற்ப, அவர்கட்கு ஏற்ற வண்ணம் ஆணைகள் பிறப்பித்து, அதிகாரப் பத்திரமும் இராஜ முத்திரையோடு தந்து, உயிர் போவதாயிருக்கும் காலத்தும் அப்பத்திரங்களைப் பிறர் அறியாவண்ணம் காக்க வேண்டும் என்ற ஆணையும் இட்டு அனுப்பினன். இவ்வாறு அரசியற்குரிய பல வகை வேலைகளையும் ஒருவாறு அன்று தொடங்கி முடித்துவிட்டுச் சிறிது இளைப்பாறினன்.

உரிய காலத்தில் இறைவன் திருவருட் பேற்றை அடையும் கருத்தே பெரிதும் உடையனாயிருந்த காரணத்தால், முதுகுடுமிப் பெருவழுதி, அயல் நாடுகளில் நல்லரசு இல்லாதவற்றை அடக்கவும் ஆளவும் முறையில் நிறுத்தவும் கருதினான். ஒற்றரால் தான் அறிந்த உண்மைகளைக் கொண்டு தன் நாட்டிலும் பிற நாடுகளி-