பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

II

முதுகுடுமிப் பெருவழுதி, பாண்டிய நாட்டு அரசுரிமையை யேற்றுக்கொண்டு ஐந்து ஆண்டுகள் ஆயின. பாண்டிய நாடு முழுவதும் அவன் சுற்றிப் பாராத சிற்றூரு மில்லை; பேரூரு மில்லை. நகரங்கள் அவனது தர்ம தனத்தாலும் அரசாங்க ஆதரவாலும், அறநிலை, கலா நிலையம், நூல்நிலையம் முதலியவற்றைப் பெற்றன. கிராமங்களிலும் அறிவுடையார் அநேகர் வாழ்ந்தன ராதலால், அவர்களது பேச்சு எழுத்து என்னும் இரண்டு வழிகளால், அங்குள்ளார் அனைவரும் தெய்வ நம்பிக்கை, இராஜ பக்தி, தேச பக்தி, எதிர் கால வாழ்வில் நாட்டம் முதலிய சிறந்த குணங்கள் உடையவராய் விளங்கினர். வாயில்லாப் பிராணிகளாகிய கன்று காலிகளைத் தெய்வங்களே போலப் போற்றும் எண்ணம் எங்கும் பரவியதால், அவற்றுக்கு அவ்வக்காலங்களில் நேரிடும் சிறிய பிணிகளை ஒழிக்கவும் வருமவற்றை வராமற் போக்கவும் வேண்டும் உதவி செய்துகொண்டு, அரசாங்க அதிகாரம் பெற்ற சில மிருக வைத்தியர்கள் நாடெங்கும் சஞ்சரித்து வந்தார்கள். மும்மாரி பெய்வதும் முப்போகம் விளைவதும் எங்கும் இயற்கையாய் விளங்கின. நீர் நிலைகளுக்கு எங்கெங்கிருந்து நீர் சேர்த்துப் பயிர்களுக்கு உதவச் செய்யலாமோ, அதற்கு ஏற்ற முயற்சிகளை யெல்லாம் அரசன் அனுமதி பெற்ற