12
பாண்டிய மன்னர்
வெகு விரைவில் கொடுந்தமிழ் நாடடைந்தனர். அங்குள்ள சிறிய குறும்பர்கள் திறைகளோடு வந்து வணங்கினர். சிறு நாடுகளுக்குத் தலைவர்களாயிருந்த அரசர்கள் தங்கள் அமைச்சர்கள் ஆலோசனைப்படி கடல் புரண்டெழுந்து வருவது போல வரும் பாண்டியர் படைக்குமுன் எதிர்த்து நின்று அழிவதைக் காட்டிலும் வணங்குவதால் வாழ்வதே மேலென அறிந்து, “வாழிய வெங்கோ மன்னவர் பெருந்தகை, ஊழி தொ றூழிதொ றுலகங் காக்க,” என்று பாண்டியனை வாழ்த்தி வணங்கினர் சில மாதங்கள் இவ்வாறு பல அரசர்களையும் தன் அடிப்படுத்திக்கொண்டு முன்னேறிச் சென்று கங்கைக்கருகில் உள்ள வடநாடடைந்தனன். மொழி பெயர் தேயத்தாராகிய ஆரியர் பலர் வாழ்ந்த அந்நாட்டை யடைந்த தமிழ் மறவர் தமது பண்டைப் புகழ் சிறக்குமாறு போர் செய்தனர் அரசனும் பின்னின்று ஊக்கியும் முன்னின்று நெறி செலுத்தியும் பெரும்போர் இயற்றினன். வடநாட்டு மன்னர் பலர் ஒன்று சேர்ந்து, “தென்னவன் ஒருவன் தன் நாட்டிலிருந்து நம் நாட்டுக்கு வந்து நம்மை வெல்வதா! சிங்கத்தை அதன் குகையிலேயே சிதற அடிப்பதா!” என்று கூறிக்கொண்டு, ஒன்று சேர்ந்து போரியற்றினர். எத்துணை மன்னவர் ஒன்று சேரினுமென்! வீரமும் வலியும் மிக்குப் பொலிந்தென்! வடவர் மடங்கினர்; தென்னவர் சிறந்தனர்; வெற்றித் திருவால் விளக்கம் பெற்றனர். இவ்வாறு வென்ற எல்லா மன்னரும் ஏற்ற வண்ணம் திறை யளக்கப்பெற்று அவரவர்க்குரிய நாட்டில் அவரவரை நிலைக்கச் செய்து, நல்லரசின் அமைதி-