பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன் பல்யாகசாலை...பெருவழுதி

19

னது. ஞானமார்க்கம் கர்ம வொழிவின் பிறகே வருவதாதலால், முன்னது முற்றிய பிறகே பின்னது வருதற்கு இடமுண்டு. கர்மங்கள், சத்கர்மங்கள் துஷ்கர்மங்கள் என இரு வகையாம். துஷ்கர்மங்களை யொழிக்கவே சத்கர்மங்களைப்பயில்கின்றோம். வேதத்திலே விதிக்கப்பட்ட குல முறை யறத்தைப் பின்பற்றி வாழ்ந்து வரும் நம் நாட்டு மக்கள் கர்ம முறையில் மிகவும் ஈடுபட்டவர்களாயுள்ளார்கள். ‘மன்னன் எவ்வழி மன்னுயிர் அவ் வழி’ என்பராதலால், அரசாங்கத்தை வகித்த காலத்தில் உன்னால் தெரிவிக்கப் பெற்ற உன் மனப்பான்மைக்குப் பொருந்திய தர்ம நிலையில் குடி மக்கள் வாழ்கின்றனர் நீயும் அசேர் தருமத்தை வேண்டுமளவு முறை கடவாது செய்துளை. அரசர் செய்தற்குரிய சிறந்த கர்மங்கள் வேறு சில உள. பல நாடுகளையும் நீ அடக்கி யாண்டு அரசர் பலரையும் அடிப்படுத்தியிருக்கின்றாயாகையால், ‘இராஜ சூயம்’ என்றதோர் யாகமும், அசுவமேதம் என்றதோர் யாகமும் செய்து, இந்நாள் வரை மண்ணில மக்களைத் திருப்திப் படுத்தியதுபோல விண்ணவரை மகிழ்வுறுத்தக் கடமைப்பட்டிருக்கின்றாய். ஓதல், பொருதல், உலகு புரத்தல், படை பயிறல், ஈதல், வேட்டல் என்ற அரசர்க்குரிய அறுவகைத் தொழிலில் இந்நாள் வரை வேட்டல் ஒழிந்த ஐந்தே உன்னால் இயற்றப்பட்டு வந்துள. வேட்டல் என்ற தொழில் ஒன்றே விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் உள்ள தொடர்பை வளர்ப்பதாம். அவ்வருந்தொழிலையும் இயற்றி, அறுதொழிலும் இயற்றிய அரசனாக உன்னை ஆக்கிக் கொள்வதே உனக்குப் புகழும் பெருமையுமாம். சில நாட்களாக ஏதோ மனக் கவலை யுடையாய் என எண்ணத்தக்கவாறு தோன்றியதால், ஒரு குறையும் இல்லாத உனக்கு வந்த குறை யென்னவென்று நாங்கள் ஆராயலாயினோம். இனி ஏதோவொன்று இயற்றி நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் உன் உள்ளத்திலிருப்பதாகத் தோன்றுவதால் இவ்வுலக