பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன் பல்யாகசாலை...பெருவழுதி

21

தொடங்கினர். அமைச்சரும் புரோகிதரும் ஆலோசனை செய்து நாடெங்கும் வேள்வி செய்விக்கும் திறம் வாய்ந்த வேதியர்க்கு நிருபம் போக்கினர். சில தினங்களில் மதுரை நகரில் அறிவுடை யந்தணர் பலர் கூடினர். அரசனும் நிமித்திகரைக் கொண்டு நல்ல நாள் ஒன்று தீர்மானித்து, யாக சாலை அமைக்கத் தொடங்கினன். பல யாக சாலைகளும் அரசன் மனத்துக்குப் பொருந்த அமைந்த பிறகு நன் முகூர்த்தத்திலே அவற்றுட் சிறந்ததோர் யாகசாலையில், முதன் முதலில் அசுவமேதம் செய்யத் தொடங்கினன்.

உயர்ந்த இலக்கணங்கள் பலவும் அமைந்த குதிரை யொன்றை முகப் பட்டம் கட்டுவித்துப் பூப்பிரதக்ஷிணம் செய்ய அனுப்பினன். அப்பரியைப் பின் பற்றி அநேக வீரர் சென்றனர். பாரத பூமி முழுவதையும் சுற்றிச் சென்ற விடமெல்லாம் சிறப்புச் செய்யப்பெற்று அது திரும்பி வந்தது. யாக சாலையில் அந்தணர் கூட்டத்தோடு இருந்த அரசன் வேதமந்திரங்களைத் திருப்திகரமாக உரிய முறையிலே ஓதி, அக்குதிரையைக் கொண்டு முதன்மையான அந்த அசுவமேத யாகத்தை நிறைவேற்றினன். அது முடிந்ததும் சிவகங்கையாகிய வையை என்றபுண்ணிய நதியில் நீராடித் தக்கார் பலர்க்கும் பல வகைத் தானங்களும் தந்தனன். புலவர்க்கெல்லாம் அவரவர் தகுதிக்கேற்பப் பரிசில் பல வழங்கினன்.

பின்னர்ச் சில தினங்கள் சென்றதும் இராச சூய யாகம் ஒன்று நிறைவேற்ற முயன்றனன். அநேக அரசரையும் வென்று வந்திருந்தானாகையால், அவரனை வரும் அளந்திருந்த திறைகளைக் கொண்டு, வேத-