22
பாண்டிய மன்னர்
முணர்ந்த அந்தணர் பலர் உதவியால், தான் அமைத்த பல யாக சாலைகளிலே இராச சூய யாகத்துக்கமைந்த இலக்கணம் அமைந்த ஒன்றில் இறைவன் திருவருளால் அவ்யாகத்தையும் இயற்றினன். அங்கும் புலவர்க்கும் பிறர்க்கும் அந்தணர்க்கும் அவரவர்க் கேற்ற வண்ணம் தருமமும் தானமும் வழங்கினன். அருகில் இருந்த புலவர் எல்லாம் இவ்வருஞ்செயல்களைக் கண்டு, அவனை வாயார மனமாரப் புகழ்ந்து வாழ்த்தினர். அரசரனை வரும் தன்னை வணங்க அவர்கட்கெல்லாம் தலைவன் என்ற பதத்தையும் பெற்றனன்.
இரண்டு யாகங்களை இவ்வாறு நன்கு நிறைவேற்றியதால் மனத் திருப்தி யடைந்த முதுகுடுமிப் பெரு வழுதி மேன்மேலும் அசுவமேத யாகங்கள் செய்யலாயினன். நிருமித்த பல யாக சாலைகளிலும் அசுவ மேதங்கள் நிறைவேறின. அந்தணரும் முனிவரும் அறிவரும் பிறரும் அவை நடைபெற வேண்டுமளவு உதவி செய்தனர். இச்சிறப்பை யெல்லாம் அருகிலிருந்தே அறிந்த அரசர் பலர், புலவர் பலர், பெரியோர் பலர் ஒருங்குதிரண்டு ஒருநாள் அரசனையணுகி அவனை மனமார வாயார வாழ்த்தினர். புலவருள் வயோதிகர் ஒருவர் எழுந்து, “இன்று முதல் எம் மன்னர் பெருமான், பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெரு. வழுதி என்று பெயர் பெறுக,” என்று எவரும் அறியக் கூறினர்.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற அத்தமிழ் மன்னன் இக வாழ்வும், பர வாழ்வும், சிறப்பும் பெற்று இவ்வாறு வாழ்வதை அறிந்த