பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன் பல்யாகசாலை...பெருவழுதி

31

நோயாளிக்குத் தன் பிணிக்கு மருந்துண்டு என்ற நம்பிக்கையும், மருந்தின் தன்மையைப்பற்றிய அறிவும், மருந்தை உட்கொண்டு பத்தியம் அனுசரிக்கும் ஒழுக்கமும் இருந்தாலன்றி அவன் நோய் நீங்கிச் சுகம் பெறுதலாகிய பயனை யடையான். ஆகையால், இந்த மும்மணிகளையும் மோக்ஷ மார்க்கம் எனக் கொண்ட எங்கள் மதம் கேவலம் பக்தி, ஞானம், ஒழுக்கம் என்ற மூன்றில் ஒவ்வொன்றே வழியாம் என்று கொண்ட பிற கொள்கைகளைக்காட்டிலும் சிறந்ததாம்.”

பௌத்தர்:–“புத்ததேவர் எங்கள் மத ஸ்தாபகர். இவர் ஜீவகாருண்யமே ஸ்வரூபமாயுள்ளவர். பல்வகைப் பிறவிகளிலும் பிறந்து, அவ்வப்பிறவிகளில் ஜீவர்களுக்கு உள்ள சுக துக்கங்களை அளந்து அறிந்தவர்; தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்; அருளறம் பூண்டவர்; அறக்கதிர் ஆழி திறப்பட வுருட்டிக் காமனை வென்ற வாமர். துக்கங்களை ஒழித்து நிர்வாணம் பெறுதலே எங்கள் முக்கியக் கொள்கை. புத்த சரித்திரமும் பௌத்த தர்மமும் பௌத்த சங்கமும் எங்களுக்கு மும்மணிகளாம். புத்தரையும் புத்த தர்மத்தையும் சங்கத்தையும் தியானம் செய்வதே முக்கிய மந்திரமாம். நிர்வாணம் அடைய வேண்டின், துக்கம், துக்கோத்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என்ற நான்கையும் அறிய வேண்டும். பேதைமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்ச்சி, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன் என்ற பன்னிரண்டு சார்பையும் அறிய வேண்டும். பிறப்புக்குக் காரணம் அவாவும் பற்றும் ஆகையால், அவற்றை யொழிக்கத் துறவு பூண்டலும் பல பிறவிகள் பிறந்து கருமக் கட்டறுத்தலும் துறவுள்ளத்தால் மெய்யுணர்வு பெற்று நிர்வாணம் எய்து தலும் எங்கள் நோக்கங்களாம்.”

வைதிக மார்க்கப் பிரமாண வாதி:– எமக்கு உரிய பிரமாணங்கள் பத்தாம்: வேறு விதமும் கூறுவர்: அவை பிரத்தி-